வார்த்தையின் அதிகாரத்தில் இயேசு JESUS ON THE AUTHORITY OF THE WORD உட் ரிவர்,இல்லினாய்ஸ்,அமெரிக்கா 54-02-17 1. சகோதரன் பிரிவர், உங்களுக்கு நன்றி.நீங்கள் உட்காரலாம். வியாதியஸ்தர்களுக்காகவும், உபத்திரவப்படுகிறவர்களுக்காகவும் ஜெபிக்கவும், நம்மை நேசித்து தம்முடைய ஜீவனைக் கொடுத்த நம்முடைய நேசராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஊழியம் செய்யவும், இன்றிரவு இங்கே கர்த்தருடைய ஆராதனையில் இருப்பது உண்மையிலேயே ஒரு மகத்தான சிலாக்கியமாக உள்ளது. அபாத்திரமானவர்களாகிய நாம் அவருடைய கிருபையிலும் ஐக்கியத்திலும் பங்குள்ளவர்களாக செய்துள்ளார், வரப்போகிற காலங்களிலும் அப்படியே செய்வார். இப்பொழுது அவருடைய ஆசீர்வாதங்களும் அவருடைய கம்பீரமான பிரசன்னமும் நம் ஒவ்வொருவரையும் அவருடைய ஜீவனுள்ள தன்மையோடு கூட அபிஷேகிப்பதாக, நாம் இக்கட்டிடத்தை விட்டு செல்லும் வரையில் அது எவரையும் விட்டு விலகாதிருப்பதாக, அவரே மகிமையை பெற்றுக் கொள்வாராக. நாம் எப்போதுமே.... வழக்கமாக சுகமளிக்கும் ஆராதனைகள் என்னை சிறிது நரம்புத்தளர்ச்சி (nervous) உடையவனாக ஆக்குகிறது, சரியாக நீங்கள் நினைப்பது போன்று அவ்விதமான நரம்புத் தளர்ச்சி அல்ல. வியாதியஸ்தருக்காக ஊழியம் செய்யும் போது, அது - அது அந்தவிதமாகத்தான் என்னில் கிரியை செய்கிறது. 2. ஆவிக்குரிய ஜனங்கள் எப்போதுமே விநோதமானவர்களாகவோ அல்லது விசித்திரமானவர்களாகவோ எண்ணப்படுகின்றனர்.உலகம் தோற்றுவித்த மகத்தான கவிஞர்களைக் குறித்து எண்ணிப் பார்ப்போம், உதாரணமாக, ஸ்டீபன் ஃபோஸ்டர் (Stephen Foster) போன்றவர்கள். அவர் ஒரு நரம்புக்கோளாறு உடையவராக எண்ணப்பட்டார். அவர் மகத்தான மரபிசை பாடல்கள் (folk songs) சிலவற்றை அமெரிக்காவிற்கு அளித்துள்ளார்: "வீட்டின் பழைமையான ஜனங்களே”, “ஸ்வானி நதி” போன்ற பாடல்கள். அந்த ஊக்குவிப்பு அவரை விட்டு போன பிற்பாடு, அவர் - அவர் வெளியில் சென்று மது அருந்தினார். பிறகு, அவர் இறுதியாக ஒரு வேலைக்காரனை அழைத்து, ஒரு சவரக் கத்தியை எடுத்து தற்கொலை செய்து கொண்டார்... அதன் பிறகு, அந்த பிரபலமான பழைய பாடலை எழுதிய வில்லியம் கூப்பர் (William Cowper): இம்மானுவேலின் இரத்தக்குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்றுண்டு பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி தங்கள் பாவக் கறைகள் யாவையும் போக்குகின்றனர். இந்த பிரபலமான மனிதராகிய வில்லியம் கூப்பரின் கல்லறையினருகில் நான் சமீபத்தில் நின்றிருந்தேன், அது லண்டனில் உள்ளது. அவர் அந்த பாடலை எழுதும்படியான ஊக்குவித்தலைப் பெற்ற பிற்பாடு - அவர் அந்த ஊக்குவித்தலை விட்டு வெளியே வந்த போது, அவர் தற்கொலை செய்யும்படியாக ஒரு ஆற்றைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார். 3. நீங்கள் மேலான நிலையில் இருப்பது மோசமானதல்ல; அது அற்புதமானது, அல்லது இங்கே கீழான நிலையில் இருக் கும் போது. ஆனால் அது அந்த காலங்களுக்கு இடைப்பட்டதாக உள்ளது. நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரி யாது. நீங்கள், "நல்லது, அவர்கள் பாடலை எழுதியவர்கள்" என்று கூறலாம். நல்லது, தீர்க்கதரிசிகளும் அவ்வாறிருந்தனர், நாம் சென்ற மாலையில் யோனாவைக் குறித்து பேசினபடி, செயின்ட் லூயிஸைப்போன்று அளவுடைய ஒரு பட்டணம் மனந்திரும்பும்படி, அப்பட்டணத்திற்கு சென்று சொல்லும்படியாக ஒரு செய்தியை தேவன் அவனிடம் கொடுத்தார். அந்த தீர்க்கதரிசி வீதிகளில் மேலும் கீழும் சென்று பத்து இலட்சம் படிப்பறியாத ஜனங்களுக்கு அவனுடைய செய்தியை அளித்த பிறகு - அவர்களில் சிலருக்கு எது வலது கை என்றோ எது இடது கை என்றோ தெரியாதிருந்தது. அவர்கள் தங்களுடைய மிருகங்களுக்கு இரட்டுடுத்தும் அளவுக்கு அப்படிப்பட்ட விதமாக மனந்திரும்பினர். அதற்குப்பிறகு அவன் ஒரு சிறிய ஆமணக்குச் செடியின் கீழே உட்கார்ந்தான். அந்த ஊக்குவித்தல் அவனை விட்டுப் போன பிறகு, அவனுடைய ஜீவனை எடுத்துக் கொள்ளும்படிக்கு அவன் தேவனிடம் ஜெபித்தான். அவன் எங்கிருந்தான் என்பதை அறியவில்லை. புரிந்து கொள்ளவுமில்லை. 4. பழங்காலத்து மகத்தான தீர்க்கதரிசியும் யேகோவாவின் மகத்தான சாட்சியுமாயிருந்த எலியா கர்மேல் பர்வதத்தில் போன போது, யார் தேவன் என்று காண்பதற்காக, பாகாலுக்கு முன்பாக இஸ்ரவேலரை அழைத்து வந்து, "பாகால் தேவனானால் அவனைச் சேவியுங்கள். தேவன் தேவனாயிருந்தால் அவரை சேவியுங்கள்” என்றான். தேவன் ஊக்குவித்தலைக் கொண்டு அவனை அபிஷேகித்த போது, அவனுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்து, காரியங்களை எவ்வாறு செய்வதென்று அவனிடம் கூறினார்... அவன் வெளியே சென்று பாகாலின் எல்லா தீர்க்கதரிசிகளையும் அழைத்து, அவர்கள் பலியிடும்படி செய்தான். அவர்கள் உரத்த சத்தமாய் கூப்பிட்டு, தங்களைத் தாங்களே கீறிக்கொண்டார்கள்: எந்த தேவனும் வரவில்லை. ஆனால் எலியா ஒரு காளையைக் கொன்று, பர்வதத்தின் மேலிருந்த அந்த பலிபீடத்தின் மேல் வைத்து, "கர்த்தாவே, நீர் தேவனென்றும் நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும் விளங்கப்பண்ணும்” என்றான். "நான் இந்த காரியங் களை எல்லாம் உம்முடைய கட்டளையின்படியே செய்தேன்" என்று கூறினான், என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் அவனிடம் காண்பித்திருந்தார் என்பதை அவன் காட்டினான். கர்த்தர் அவனுக்குக் காண்பித்திருந்த அந்தத் தரிசனத்தை அவன் நிறைவேற்றின போது, தேவனுடைய அக்கினி வானங்களி லிருந்து (heavens) விழுந்து, பலியைச் சுட்டெரித்துப் போட்டது. மூன்று வருஷம் ஆறு மாதங்கள் மழை பெய்யாமலிருந்தது. அவன் வானங்களை அடைத்திருந்தான், ஏனெனில் கர்த்தர் அவனிடம் அவ்வாறு கூறியிருந்தார். அவன் உரைத்தாலன்றி தண்ணீர் இல்லாமலிருக்கும் என்றும் பனியும் கூட பெய்யாதிருக் கும் என்றும் அவன் இராஜாவிடம் கூறினான். அதற்குப் பிற்பாடு அவன் வெளியில் சென்று, உட்கார்ந்து மீண்டும் ஜெபம் பண்ணினான், பெருமழை பெய்தது. அம்மழை தேசம் முழுவதையும் தண்ணீரால் நிரப்பிற்று. அந்த ஊக்குவித்தல் அவனை விட்டுப் போனவுடனே, ஒரு ஸ்திரீயினுடைய மிரட்டலின் காரணமாக அவன் வனாந்திரத்திற்குள் ஓடி, நாற்பது நாட்கள் இரவும் பகலும் அலைந்து திரிந்தான். தேவன் அவனை கண்டுபிடித்த போது, அங்கே வெளியே சுற்றித் திரிகிறவனாக இருந்தான், அவன் அதனருகே சுற்றித் திரிந்து, எங்கேயோவுள்ள ஒரு குகைக்குள் ஊர்ந்து சென்றான். தேவன் அவனை அழைத்தார். 5. நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதைக் காண் கிறீர்களா? மற்றவர்களையும் நம்மால் குறிப்பிட முடியும். ஆனால் ஜனங்களே, இன்று கிறிஸ்தவமும் அது கொண்டிருக்கிற வழி முறைகளும் மிகவும் ஆழமற்றதாக உள்ளது. கிறிஸ்தவத்தை விசுவாசிப்பது எவ்வாறு என்று அவிசுவாசிகளுக்கு கடினமாக தோன்றுவதில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில் அது ஒரு - ஒரு அமைப்பைக் காட்டிலும் மேலானதாக இல்லை. ஆனால் கிறிஸ்தவமானது அதனுடைய வல்லமையில் உண்மையாய் உள்ளது. அது வெறுமனே சடங்காசாரமாக இருந்தால், மற்ற எந்த - மற்ற எந்த சடங்காசார முறைகளும் அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும். விடுதிகளுக்கு எதிராக எனக்கு எதுவும் கிடையாது, அது சடங்காசாரமாக இருந்தால், மேசன் விடுதியோ (Masonry), விநோதமானவர்களின் கூட்டத்தாரோ (Odd Fellows), அல்லது அவர்களில் யாருமோ அதைப் போன்று நல்லவர்கள் தான். சபையைப் போன்று அதில் நல்லதும் தீயதும் உள்ளது. ஆனால் கிறிஸ்தவமானது மனித இனத்தில் ஒரு ஜீவிக்கும் மெய்ப்பொருளாய் உள்ளது. அது நமக்குள் இருக்கும் தேவனாகிய, தேவ குமாரனின் உயிர்த்தெழுதலின் நிரூபணமாக உள்ளது. 6. இப்பொழுது, நாம் அவருடைய வேதவாக்கியத்தில் ஒரு பாகத்தை சற்று வாசித்து, சிறிது நேரம் உங்களிடம் பேசப் போகிறேன். மேலும் இப்பொழுது, நாம் உடனடியாக வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்குள் நேராக செல்லப் போகிறோம். சில சமயங்களில் இந்தக் கூட்டங்களில், என்னால் பிரசங்கம் பண்ணு வதற்குள் போக முடியவில்லை. கர்த்தருக்குச் சித்தமானால், நாம் முயற்சிக்கப் போகிறோம், வெள்ளிக்கிழமை இரவில் ஒரு மிஷனரி கூடுகை உண்டு. மிஷன் ஊழியங்களுக்காக என்னுடைய இருதயம் பரவசமடைகிறது. முப்பதாயிரம் பக்குவப்படாத அஞ்ஞானிகள் ஐந்து நிமிடங்களில் இயேசு கிறிஸ்துவுக்காக வெல்லப்பட்டு, தங்களுடைய விக்கிர கங்களைத் தரையில் போட்டு உடைத்து விட்டு, நடந்து சென்று, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதை நான் கண்டேன் என்று உங்களுக்குக் கூறுவேன். முகமதியர்களும், இந்துக்களும்... எருசலேமுக்கு செல்வதற்காக நான் மிகவும் பசியாயிருக்கி றேன். ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்கோம் சபையைச் சேர்ந்த சகோதரன் பத்ரஸ் (Brother Pethrus) - அது ஸ்வீடனிலேயே மிகப்பெரிய சபையான பிலதெல்பியா சபை... ஈரான் தேசத்திலிருந்தும் மற்ற வைகளிலிருந்தும் யூதர்களை அவர்கள் கொண்டு வந்திருந் தார்கள். நீங்கள் எல்லாரும் செய்தித்தாளில் வந்திருந்த படங் களை கவனித்திருப்பீர்கள். அது புறஜாதிகளுடைய காலங்களின் முடிவுக்கு மிகவும் அழகான அடையாளமாக உள்ளது. இப் பொழுது தேவன் யூதர்களிடமாக திரும்பப் போகிறார். புறஜாதி சபையானது முத்திரை போடப்பட்டு, முடிவடைந்து, போய் விடும். 7. இயேசு பூமியில் எப்பொழுதாவது இருந்தாரா என்பதை அந்த யூதர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவோ அல்லது கேள்விப்படவோ கூட இல்லை. அவர்கள் புதிய ஏற்பாட்டைப் பெற்றுக் கொண்டு, அவர் யார் என்பதை அறியும்பொருட்டு அவர் இங்கே பூமியில் இருந்த போது அவர் எப்படியாக அடையாளங்களை நடப்பித்தார் என்பதை அறியும்படி அதை வாசிக்க ஆரம்பித்தனர். அவர் எந்த மகத்தான மனிதராகவும் இருப்பதாக உரிமை கோரவில்லை . அவர் ஒரு சுகமளிப்பவராக இருப்பதாக உரிமை கோரவில்லை. அவர் அப்படியே, "என் பிதாவானவர் எனக்கு காண்பித்தாலன்றி நான் எதையும் செய்வதில்லை” என்றார். அவர், "பிதாவானவர் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுக்கும் போது, என்ன செய்ய வேண்டுமென்று அவர் என்னிடம் சொல்வதை நான் - நான் போய் செய்கிறேன்” என்றார். அவர்கள், "அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து விட்டார் என்று கிறிஸ்தவன் கூறுகிறான், அவர் செய்த காரியங்களை கிறிஸ்தவனும் கூட செய்வான் என்று வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார்" என்று கூறினார்கள். யூதன், "அது சம்பவிப்பதை நான் காணட்டும், அப்பொழுது நான் விசுவாசிப்பேன். அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தை செய்வதை நாங்கள் காணட்டும், அப்பொழுது அவரை நாங்கள் மேசியாவாக ஏற்றுக் கொள்வோம்” என்றான். 8. "யூதர்கள் அடையாளத்தைத் தேடுகிறார்கள், கிரேக்கர்களோ ஞானத்தை தேடுகிறார்கள்.” உங்களுக்கு அந்த வேத வாக்கியம் தெரியும். நல்லது, நான் கூட்டங்களுக்காக அநேக ஆயிரக்கணக்கானோரை ஒன்று கூட்ட விரும்பினேன், அவர்கள் இப்பொழுது ஒன்று கூடுகிறபடி (அல்லது பாலஸ்தீனாவில் ஒன்று கூடப் போகிறார்கள்). அவருடைய வேதவாக்கியத்தில் எழுதப் பட்டுள்ள அதே விதமாக, யேகோவா தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டார் என்பதை அந்த யூதன் ஒருவிசை காண்பான் என்று நான் விசுவாசிக்கிறேன். அது எந்த மூன்று தேவர்களும் அல்ல; அதே தேவன், மாம்சத்தில் வெளிப்பட்ட அதே தேவன் மூன்று உத்தி யோகங்களில் தம்மை வெளிப்படுத்தினார். அதுதான் அவனை இடறப்பண்ணுகிறது. அது நிஜமாக இருப்பதை அவன் காணும் போது, அவன் அதை ஏற்றுக்கொள்வான். 9. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, ரோமன் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவராயிருந்து, இருபது வருடங்களாக குருடனாயிருந்த ஜான் ரையான் இந்தியானாவில் உள்ள ஃபோர்ட் வேய்னுக்கு அருகே தெருவில் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக் கொண்டும், பென்சில்களை விற்றுக்கொண்டும் அல்லது என்னை மன்னியுங்கள், செய்தித்தாள்களை விற்றுக்கொண்டும் இருந்தான். அவன் சுகமாக்கப்பட்ட போது, நான் ஒரு ரபியால் நேர்முகப் பேட்டி எடுக்கப்பட்டேன். அவர் என்னிடம், “நீர் எப்படி ஜான் ரையானுடைய கண்களைத் திறந்தீர்?” என்று கேட்டார். நான் அவரிடம், "நான் அவைகளைத் திறக்கவில்லை. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவே அவனுடைய கண்களைத் திறந்தார்” என்றேன். அவர், “முட்டாள்தனம். அவர் தேவகுமாரனல்ல. அவர் கிறிஸ்து அல்ல” என்றார். நானோ, “ரபி அவர்களே, நீர் ஏன் அவ்வாறு எண்ணுகிறீர்?” என்றேன். அவர், "நல்லது'' என்றார். அவர் தம்முடைய ஆதாரங்களைத் தெரிவித்தார். "வல்லமையோடு வந்த மேசியா அவரல்ல” என்றார். நான், "ஐயா, நீர் அவருடைய இரண்டாம் வருகையை எதிர்நோக்கி இருந்தீர். அவருடைய முதல் வருகையை குறித்து உரைக்கிற அதே வேதவாக்கியம் தான், காலம் நிறைவேறும் வரை யூதர்கள் குருடாயிருப்பார்கள் என்றும் கூறுகிறது” என்றேன். அவர், "புறஜாதிகளாகிய நீங்கள் தேவனை மூன்று பாகங்களாக கூறுபோட்டு, ஒரு யூதனை ஏமாற்ற முடியாது” என்றார். நான், "சீர்திருத்தத்தின் போது, சரி செய்யாமல் விடப்பட்ட ஒரு தவறாக அது உள்ளது. தேவன் மூன்று பாகங்களாக கூறுபோடப்பட்டிருக்கவில்லை” என்றேன். அவர், "நீங்கள் எல்லாரும் அர்த்தமற்ற காரியங்களையே உண்டாக்குகிறீர்கள். நீங்கள் ‘பிதாவாகிய தேவனே' என்றும், 'குமாரனாகிய தேவனே' என்றும், 'எங்கள் தேவனே' என்றும் கூறுகிறீர்கள். நல்லது, அவர்களில் யார் உங்களுடைய தேவன்?" என்று கேட்டார். நான், "அங்கே ஒரே ஒருவர் மாத்திரமே உண்டு” என்றேன். "ஆனால் அது எவ்வாறு இருக்கக்கூடும்? பிதாவாகிய தேவன் ஒரு நபராக இருந்தால், குமாரனாகிய தேவன் வேறொரு நபராகவும், பரிசுத்த ஆவியாகிய தேவன் வேறொரு நபராகவும் இருக்கிறார். அப்படியிருக்க நீங்கள், எங்கள் தேவர்களே' என்று கூற வேண்டுமே. அது உங்களை அஞ்ஞானிகளாக்குகிறது.'' நான், “அது அவ்வாறு தான் இருக்கும், ஐயா. ஆனால் அது அவ்விதமாககிடையாது” என்றேன். நான், " இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய அக்கினிஸ்தம்பத்தில் இருந்த யேகோவா தேவன் பாவத்தை நீக்கிப்போடுவதற்காக இங்கே மாமிசத்தில் வெளிப்பட்டு, பரிசுத்த ஆவியின் ரூபத்தில் மீண்டும் வந்திருக்கிறார். அது தேவனுடைய மூன்று உத்தியோகங்களாக உள்ளது, அதன் காரணமாகவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்” என்றேன். நான், "அதே தேவனே மூன்று உத்தியோகங்களைக் கொண்டவராக இருக்கிறார். நமக்கு ஒரே தேவன் தான் உண்டு” என்று சொன்னேன். அவருடைய தாடியில் கண்ணீர் வடியத் தொடங்கியது, அவர் திரும்பி நடந்து சென்றார். நான், "ஒரு நிமிடம். சில நிமிடங்களுக்கு முன்பு நீர் என்னிடம் ஒரு காரியத்தைச் சொன்னீரே” என்றேன். அவர், "நான் வேறொரு சமயம் நீர் சொல்வதைக் கேட்கிறேன்” என்றார். நான், “நீர் இப்பொழுதே கேட்க விரும்புகிறேன். ஏனெனில் அவர் மேசியாவாக இருந்தார் என்று நீர் விசுவாசிக்கிறீர் என்று எனக்குத் தெரியும்” என்றேன். அவர் பதில் கூறவில்லை , திரும்பி உள்ளே சென்று விட்டார். ஆனால் அவர்களுடைய காலம் சமீபமாயுள்ளது. 10. நான் இங்கே வேதவாக்கியங்களிலிருந்து வாசிக்க விரும்புகிறேன்: பரிசுத்த லூக்கா 7-வது அதிகாரம். (லூக்கா 7:1-10) அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான். அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களுடனேகூடப் போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகி தரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள். 11. நாம் நம்முடைய தலைகளை வணங்கி, இந்த வார்த்தை யின் ஆக்கியோனிடம் பேசுவோம். எங்களுடைய மிகவும் இரக்க முள்ள பரலோகப் பிதாவே, இந்த உலகத்தில் அடைக்கப்பட்டவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும், தேவனற்றவர்களாகவும் தேவனுக்கு அந்நியர்களாகவும், புறஜாதிகளாகவும் நாங்கள் இருந்த போது, உம்முடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எங்களிடத்தில் அனுப்பினதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். குறித்த காலத்தில் கிறிஸ்து எங்கள் எல்லாருக்காகவும் மரித்து, சகல தேசத்தாரையும் கொண்டு வந்தார், தேவன் ஜனங்களை ஒன்றாக சிருஷ்டித்தார். இன்று கட்டப்பட்டவர்களோ விடுதலையானவர்களோ, ஆணோ பெண்ணோ , எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறார்கள். முடிவு என்னவாயிருக்கும் என்று இன்னும் கண்ணுக்கு புலப்படவில்லை, ஆனால் அவருடைய சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தை நாம் கொண்டிருப்போம் என்றும் அவர் இருக்கிற விதமாகவே நாம் அவரை காண்போம் என்றும் நாம் அறிந்திருக்கிறோம். அதற்காக நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 12. இப்பொழுதும், இரக்கமுள்ள பிதாவே, இன்றிரவு நீர் மீண்டும் உம்முடைய பிரசன்னத்தைக் கொண்டு, எங்களை ஆசீர் வதிப்பீரா? நீர் ஜனங்களின் மத்தியில் வருவீரா? தங்களுடைய இருதயத்தில் நிழல்களைக் கொண்டுள்ள ஒவ்வொரு நபரும், எந்த சந்தேகத்திலிருந்தும் அவிசுவாசத்திலிருந்தும் விடுவித்துக் கொள் வார்களாக. இன்றிரவு இங்கிருக்கும் ஒவ்வொருவருடைய ஜீவியம் மற்றும் இருதயத்தில் உள்ள வழியின் உரிமையையும், மற்றும் எல்லாவற்றையும் விட சிறந்த உரிமையையும் பரிசுத்த ஆவியானவர் கொண்டிருப்பாராக, அவருடைய பிரசன்னத்தின் காரணமாக எங்களுடைய இருதயம் எங்களுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது என்று நாங்கள் இங்கிருந்து செல்லும் போது சொல்லப் படுவதாக. இதை அருளும், கர்த்தாவே. கர்த்தாவே, அவிசுவாசிகளோ, இரட்சிக்கப்படாத எவராவது இங்கிருந்தால், இன்றிரவு அவர்களை இரட்சியும். இதை அருளும். நீர் இங்கிருக்கிறீர் என்பதை ஜனங்கள் அறியும்படியான விதத்தில் ஏதோவொன்று செய்யப்படுவதாக. பேசுகிற உதடுகளையும், கேட்கிற இருதயங்களையும் விருத்தசேதனம் பண்ணும். பிதாவே, இன்றிரவு வியாதியஸ்தரை சுகப்படுத்தும். 13. நீர் இங்கே பூமியில் இருந்த போது, நீர் செய்த காரியங்களையும், பிதாவாகிய தேவனுக்கு நீர் எல்லா மகிமையையும் கொடுத்ததையும் நங்கள் வாசித்தோம். நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர், "இந்தக் கிரியைகளைச் செய்வது நானல்ல, என்னில் வாசமாயிருக்கிற என் பிதாவே அவைகளைச் செய்கிறார்” என்றீர். இன்றிரவு புத்திர சுவிகாரத்தின் மூலம், நாங்கள் தேவனுடைய குமாரர்களாயிருக்கிறோம். இந்தக் கிரியைகளைச் செய்வது "நாங்கள்" அல்ல, எங்களில் வாசமாயிருக்கிற பிதாவானவரே அந்தக் கிரியைகளைச் செய்கிறார். அவர் எங்களைப் பாவத்திலிருந்து இரட்சிக்கிறார், எங்களையே நாங்கள் இரட்சிக்க முடியாது. அவர் எங்களை சுகமாக்குகிறார், நாங்களாகவே சுகப்படுத்த முடியாது. ஆனால் அவர் தம்முடைய கிருபையின் மூலமாக எங்களை சுகமாக்குகிறார். நாங்கள் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் பேச வேண்டுமென்று நாங்கள் இப்பொழுது ஜெபிக்கிறோம், நாங்கள் கேட்போமாக. உம்முடைய நேச குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 14. "வார்த்தையின் அதிகாரத்தில் இயேசு.” நீங்கள் எனக்கு கவனம் செலுத்துவீர்களானால், அப்படியே சிறிது நேரம் இதை எடுக்கப் போகிறேன். ஜனக்கூட்டம் இன்னும் மிக அதிக அளவில் இல்லாத இந்நேரத்தில், நான் அப்படியே சிறிது நேரம் பேச விரும்புகிறேன். நாம் முழுவதுமாக நிரம்பி இருக்கும் போது, நீங்கள் வேறு யாரிடமும் கூற முடியும். ஆராதனை நேரத்தில் எப்பொழுதும் பயபக்தியோடு இருங்கள், முக்கியமாக சுகமளிக்கும் ஆராதனை நடக்கும் போது. திறந்த இருதயத்தோடும், திறந்த மனதோடும் இருங்கள். அப்படியே - அப்படியே, "இப்பொழுதும் கர்த்தாவே, நான் இங்கே கற்றுக்கொள்வதற்காக இருக்கிறேன்; நீர் வந்து எனக்குப் போதியும்" என்று கூறுங்கள். பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் போதிப்பார். நீங்கள் ஒரு விதமாக விமர்சனம் செய்து குற்றம் கண்டு பிடிக்கும்படி வந்திருந்தால், நீங்கள் எதைக் காண எதிர்பார்த்தீர் களோ அதையே காண்பீர்கள். நீங்கள் அப்படியே ஏமாற்றத்திற்குள்ளாவதாக எதிர்பார்த்து வந்திருந்தால், அது அவ்விதமாகவே இருக்கும்.... நீங்கள் எப்பொழுதுமே எதிர்பார்ப்பதையே பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்து, நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று எதிர்பார்த்திருந்தால், நீங்கள் என்ன பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களோ அதையே பெறுவீர்கள். தேவன் எப்பொழுதுமே அதைச் செய்கிறார். அவர் - அவர் - அவர் - தம்முடைய வார்த்தைக்கு ஆணையிட்டுள்ளார். மேலும் இப்பொழுது, உங்களுடைய மதசம்பந்தமான போதனைகளிலிருந்து அப்படியே கொஞ்சம் வித்தியாசமான சில காரியங்கள் சொல்லப்படலாம். நீங்கள் ஒருவேளை கத்தோலிக்கர்களாக இருக்கலாம் அல்லது நீங்கள் ஏதோவொன்றாக இருக்கலாம், வேறொரு படிநிலையைக் கொண்ட மதமாகவோ அல்லது தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்காத ஏதோவொரு பிராட்டஸ்டன்ட்டாகவோ இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும், அது இருக்கிற விதமாகவே அதை நோக்கிப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையின் கருத்துக் கோணத்திலிருந்து அதை அப்படியே நோக்கிப் பாருங்கள். 15. இப்பொழுது, நாம் "தேவனுடைய வார்த்தையின் அதிகாரம்” என்பதன் பேரில் அப்படியே சிறிது நேரம் பேசப்போகிறோம். இப்பொழுது, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அதிகாரத்தினால் ஆணையிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அதைத் தவறாத சத்தியமாக ஏற்றுக்கொள்ளும்படி விசுவாசியினுடைய முற்றிலுமான உரிமையாய் உள்ளது, ஏனெனில் இது தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. "வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போவதில்லை” என்று கர்த்தர் உரைக்கிறார். அது அதனுடைய குறித்த காலத்திலே நிறைவேறி யாக வேண்டும். நல்லது இப்பொழுது, அநேக நேரங்களில், அது... கிறிஸ்தவர்களும் சில சமயங்களில் ஊழியக்கார சகோதரர்களும் கூட அநேக நேரங்களில் இதன் பேரில் சிறிது குழப்பமடைந்து விடுகின்றனர். யார் தவறாயிருக்கிறார்கள் என்று சொல்வதற்கு நான் யார்? நானும் உங்களில் மீதியிருப்பவர்களோடு இருக்கிறேன். அவர்களுக்கு முன்பாக நிற்பதற்குப் பதிலாக, உட்கார்ந்து ஊழியக்காரர்கள் பேசுவதைக் கவனிக்க வேண்டியவனாயிருக்கிறேன். 16. ஆனால், என்னுடைய சகோதரனே, தேவனுடைய வார்த்தையானது... சில நேரங்களில் ஜனங்கள், “நல்லது இப் பொழுது, வார்த்தையானது இதைக் கூறியுள்ளது. அது கூறுகிற விதமாகவே அப்படியே சரியாக அதை எடுத்துக் கொள்வோம்” என்று கூறுகின்றனர். அது... நல்லது, அது - அது சரிதான். ஆனால் அந்த வார்த்தையானது ஒரு குறிப்பிட்ட நிலத்தில் விழ வேண்டும், அல்லது அது பலனைத் தராது. பாருங்கள்? ஜனங்கள் இரட்சிக்கப்பட்டதாக (கூறுவதை) நான் கேட்டிருக்கிறேன். அவர்கள், "நான் இப்பொழுது ஒரு கிறிஸ்தவன். அவருடைய நாமத்தில் நான் எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக் கொள்வேன் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். ஆமென். நான் இதற்காக கேட்கப் போகிறேன்” என்று கூறுகின்றனர். இப்பொழுது, அது இன்னும் சரியான நிலமாக இல்லாமல் இருக்கலாம். பாருங்கள்? முட்கள் நிறைந்த கற்றாழை செடியை எடுத்து களிமண்ணில் வளரச்செய்ய உங்களால் முடியாது. நீங்கள் கற்றாழை செடியை உண்மையாகவே பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கு உகந்த மண்ணில் நட்டுப் பாருங்கள், அது மரித்து விடும். கற்றாழை செடி மணலில் தான் வளரும். நீங்கள் ஒரு - ஒரு பைன் மரத்தை எடுத்து, கற்றாழை செடி வளருகிற அரிசோனாவிலுள்ள மணலில் நட்டுப் பாருங்கள், அது மரித்து விடும், ஏனெனில் அங்கே போதுமான ஈரம் இல்லை. அவைகள் இரண்டுமே இன்னும் மண்ணில் தான் நடப்பட்டிருக்கிறது. சரியான வார்த்தை சரியான இடத்தில் இருக்க வேண்டும், (அப்பொழுது) அது சம்பவிக்கும். இப்பொழுது, நான் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்காக ஜெபித்திருக்கிறேன், வழக்கமாக ஜனங்களுக்காக ஜெபிப்பது போன்று. ஆனால் இன்னும் கூட என்ன சம்பவிக்கப்போகிறது என்று அவர் என்னிடம் காட்டும் வரைக்கும், என்ன சம்பவிக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. அவர் காட்டும் போது, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் கொண்டிருக்கிறேன். அப்போது கர்த்தர் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தலில் கொண்டு வந்திருக்கிறார், அப்போது அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அப்படியே மிகச்சரியாக அறிந்து கொள்கிறேன். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை என்னிடம் சொல்லும் போது, அது ஒரு பரிபூரண விசுவாசத்தை உண்டாக்குகிறது. 17. நீங்கள் இயேசுவைக் கவனிப்பீர்களானால், தேவன் அவருக்கு அனுமதி அளித்த அக்காரியங்களை மாத்திரமே அவர் உபயோகித்தார். கடந்த இரவின் பாடம் ஞாபகம் உள்ளதா? அவர், "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். பிதாவானவர் தாம் செய்கிறவைகளைக் குமாரனுக்குக் காண்பிக்கிறார். பிதா வானவர் கிரியை செய்து வருகிறார், நானும் இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறேன்" என்றார். வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவனுடைய வார்த்தையானது கிறிஸ்துவில் வெளிப்படுத்தினதையே, செய்ய வேண்டுமென்று தேவன் அவரிடம் காண்பித்தார். எந்தத் தீர்க்கதரிசியும், எந்தக் காலத்திலும் எந்நேரத்திலும் (வாழ்ந்த) எந்த ஆவிக்குரிய மனிதனும் எப்பொழுதும் மிகச்சரியாக அதேவிதமாகவே இருந்தான். எனவே நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து, துள்ளிக்குதித்து, "வார்த்தையானது இதைக் கூறுகிறது; நான் இதை ஏற்றுக்கொண்டு இதைச் செய்வேன்” என்று கூற முடியாது. நீங்கள் அதைக் கூற முடியாது. அது இன்னும் சரியாக விழவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து, அதை உருவாக்கி, என்ன செய்ய வேண்டுமென்று உங்களிடம் காண்பிக்கிறார், அப்போது நீங்கள் அதைச் செய்ய முடியும், ஏனெனில் அது நீங்கள் செய்வதல்ல. இது எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாகவும், இரட்சிப்பின் திட்டமாகவும் உள்ளது. ஆனால் அதை எவ்விதம் கையாள்வது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். 18. உதாரணமாக, அநேக சமயங்களில், ஜனங்கள் வரிசையில் வருகிறார்கள், நானும் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். என்ன சம்பவிக்கப்போகிறது என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. நான் வெறுமனே அவர்களுக்காக ஜெபிக்கிறேன். ஜெபத் திற்கு வல்லமை உண்டு. ஜெபமானது தேவனுடைய வார்த்தையைக் கூட மாற்றிவிடும். (அது ஒரு தடை செய்பவனாக (striker) உள்ளது, இல்லையா?) ஆனால் அது சத்தியம். கர்த்தருடைய வார்த்தையானது... நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பதில்லையா? கர்த்தருடைய வார்த்தையானது ஏசாயாவிடம் வந்தது, அவன் சென்று, எசேக்கியா தன்னுடைய கட்டிலை விட்டு எழும்புவ தில்லையென்றும், அவன் மரிக்கப்போகிறான் என்றும் எசேக்கியா விடம் கூறினான். எசேக்கியாவோ தன்னுடைய முகத்தை சுவர் புறமாகத் திருப்பிக்கொண்டு, மனங்கசந்து அழுது, "கர்த்தாவே, நான் உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். நான் உமக்கு முன்பாக மன உத்தமமாய் நடந்து வந்திருக்கிறேன்” என்றான். அவன் இன்னும் கூடுதலாக 15 வருடங்கள் ஜீவிக்க வாஞ்சித்தான், தீர்க்கதரிசி போயிருக்கவில்லை, கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசியிடம் மீண்டும் வந்தது. "நான் அவனுடைய ஜெபத்தைக் கேட்டேன் என்றும், மூன்று நாளைக்குள் அவன் படுக்கையை விட்டு எழுந்திருப்பான் என்றும் அவனிடம் போய் சொல்” என்றார். ஜெபம் காரியங்களை மாற்றிவிடுகிறது. 19. அநேக நேரங்களில் நான் வியாதிப்பட்டுள்ள ஜனங்கள் எங்கிருக்கிறார்கள் என்றும், அவர்கள் மரிக்கப் போகிறார்கள் என்றும், அவர்கள் நின்று கொண்டிருக்கும் போதே அவர்களைச் சுற்றிலும் இருளாக மாறுவதையும் பார்க்கிறேன். அது மரணத்தின் சத்தம் தான் என்பதை அறிவேன். ஏனென்று நான் காண்பதில்லை, ஆனால் அவ்வளவு தான். அப்போது அவர்களிடம் அதைக் கூற வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் வெறுமனே அவர்களுக்காக ஜெபித்துவிட்டு, "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்றோ அல்லது "கர்த்தராகிய இயேசு உன்னை சுகமாக்குவாராக” என்றோ கூறி விட்டு கடந்து சென்று விடுவேன். தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில் ஒரு சீமாட்டி மேடையில் வந்தாள். கட்டிடத்திலேயே மிகவும் ஆரோக்கிமானவளைப் போன்று அவள் காணப்பட்டாள். ஒரு இலட்சம் ஜனங்கள் அங்கே கூடியிருந்தனர். அந்த ஸ்திரீ சாதாரணமாகவும் ஆரோக்கியமான வளாகவும் வந்து, அவள் மேலே நின்றாள். நான் அவளை நோக்கிப் பார்த்து சொன்னேன்; நான், "நீ ஒரு கிறிஸ்தவளாக இருப்பதை நான் காண்கிறேன்” என்றேன். அவள், "நான் கிறிஸ்தவள் தான்” என்றாள். மேலும்... பின்பு நான் மீண்டும் கவனித்தேன்; அவள் சபைக்குப் போவதையும் ஒரு கூட்ட ஜனங்களுடன் அவள் இருந்ததையும் கண்டேன். நான், "நீ இந்த சபையைத்தான் சேர்ந்திருக்கிறாய்” என்றேன். அவள், “நான் அந்த சபையை சேர்ந்தவள் தான்” என்றாள். நான் பின்னால் நோக்கிப்பார்த்து, அவளைச் சுற்றிலும் மிகவும் இருளாக மாறுவதைக் கண்டேன். நான், "நல்லது, அவள் கொண்டிருந்த ஒரே காரியம் என்னவெனில், கருப்பையில் உள்ள ஒரு நீர்க்கட்டி தான்” என்று கூறத் தொடங்கினேன். அவள் மருத்துவரிடம் போயிருந்தாள். நான், "உன்னுடைய கணவர் சாம்பல் நிற கால்சட்டையை அணிந்து கொண்டிருக்கிறார். அவருக்கு கறுத்த மீசை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, நீ நரைத்த தலைமுடியும் கண்ணாடியும் அணிந்த ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட போது, அவர் முகப்புக்கூடத்தில் காத்துக் கொண்டிருந்தார்” என்று கூறினேன். அவள், "அது சரியே” என்றாள். மேலும் நான், “உனக்கு கருப்பையில் ஒரு நீர்க்கட்டி உள்ளதாக அவர் கூறினார்” என்றேன். "அது சரியே” என்றாள். "அது வெளியே எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்." "அது சரியே.” "அதை ரேடியத்தைக் கொண்டு கரைக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.” அவள், "அது சரியே” என்றாள். தொடர்ந்து அவளைச் சுற்றிலும் இருளாக மாறிக்கொண்டிருந்தது. நான், "இப்பொழுது, என் சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னை சுகமாக்குவாராக. மேடையை விட்டு கடந்து செல்” என்று கூறத் துவங்கினேன். அப்போது அடக்க ஊர்வலம் போவதையும், அவளை பெட்டியில் வைப்பதையும் கண்டேன். நான் அவளிடம் அதை நன்றாக சொல்லியாக வேண்டும் என்று அறிந்தேன். அப்போது அது முடிந்திருந்தது. நான், "சீமாட்டியே, நீ பலமானவளாக தோற்றமளிக்கும் ஒரு ஸ்திரீயாக இருக்கிறாய், உனக்கு மிகச்சிறிய கோளாறு தான் உள்ளது. ஆனால் நீ கொஞ்ச நேரமே உயிர்வாழப் போகிறாய், மரணத்துக்கு ஆயத்தப்படு” என்றேன். அவள், "ஐயா?” என்றாள். நான், "அது சரிதான், சகோதரியே. தேவனுக்காக உன்னை ஆயத்தமாக்கிக்கொள். ஆயத்தமாகு” என்றேன். அவள் மேடையை விட்டு நடந்து சென்று உட்கார்ந்து தன்னுடைய கணவனை நோக்கிப் பார்த்து, "அதைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா?” என்றாள். சரியாக அங்கேயே விழுந்து மரித்தாள். அவளை பொதிந்து வெளியே கொண்டு சென்றனர். ஏனெனில் எதுவுமே செய்ய முடியவில்லை. அடக்க ஊர்வலம் போவதை நான் கண்டிருந்தேன். தேவன் கூறுவது சத்தியமாக உள்ளது. 20. இப்பொழுது, இது தேவனுடைய சத்தியமாக உள்ளது. அது சத்தியமாக உள்ளது. அதற்கு முரணாயுள்ள எதுவும் சத்தியமல்ல. ஆனால் அது தேசங்களுக்கும் ஜனங்களுக்கும் இரட்சிப் பின் திட்டமாக உள்ளது. ஆனால் தனி நபருக்கும் - அதன்பிறகு சில சமயங்களில், தேவன் இவ்விதமாக தம்முடைய வார்த்தையை அனுப்பி, ஊழியக்காரர்கள் அதைப் பிரசங்கித்த பிறகு... அவர் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், அந்நியபாஷை வரங் களையும், அந்நிய பாஷையின் வியாக்கியானத்தையும் சபைக்கு அனுப்பினார்; சபையின் பக்திவிருத்திக்கோ அல்லது சபையை சுத்தமாக வைப்பதற்கோ, சபையை ஒன்றாகக் கொண்டு வந்து, வெளியே பிரித்தெடுப்பதற்கோ அதுவே போதுமானதாக உள்ளது. சமீபத்தில் நியூ ஆல்பனியிலுள்ள மெதொடிஸ்டு சபையில் (அந்த நபர் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கலாம்.), ஆப்பிரிக்காவுக்கு போவதற்கு முன்னால்..... என்னுடைய பிரயாணங்களில் ஒன்றில் நான் அப்பொழுது தான் கலிபோர்னியா விலிருந்து வந்திருந்தேன். நீங்கள் அதைக் கண்டீர்களா? கலிபோர்னியாவில் பல ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த ஆராதனையை நாங்கள் கொண்டிருந்த அந்த இடத்தில், அந்த இரவு நேரத்தில் அக்கட்டிடத்திற்குள் அவர் வந்தார். 21. அங்கே ஏறக்குறைய இருபது அல்லது முப்பது சக்கர நாற்காலிகள் இதே போல வைக்கப்பட்டிருந்தன, மேலும் திறந்த வெளி பலகை இருக்கைகளில் (bleachers), கட்டில்களும், தூக்குப்படுக்கைகளும் மற்றவைகளும் இருந்தன... மேலும் என்னுடைய சகோதரனே, நீங்கள் புரிந்து கொண்டுள்ளபடி, இந்தக் கூட்டங்களில் நான் ஜனங்களிடமிருந்து விலகியிருக்கிறேன். ஏனெனில் அந்த அபிஷேகத்தைக் கொண்டு, நீங்கள் ஒரு நபருடன் பேசின உடனே, சரியாக அப்பொழுதே நீங்கள் அவர்களுடைய ஆவியுடன் தொடர்பு கொள்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் அதைச் செய்யும் போது, நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எனவே நான் அறையிலேயே தரித்திருந்தேன்; இரண்டு மனிதர்கள் வாசலருகில் எல்லா நேரமும் காத்திருந்தனர். அந்த இரவு நேரத்தில் அவர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தனர். நான் அந்த கட்டிடத்திற்குச் சென்றேன், நான் உள்ளே நடந்து சென்றதை சற்று நினைவுகூருகிறேன். நான் அப்படியே படிக்கட்டுகளின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன், அவர்களில் ஒருவர் மேலாளராகிய திரு. பாக்ஸ்டர் ஆவார், அவர்கள், "விசுவாசிப்பாய்” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தனர், நான் கூட்டத்தினர் முன்பாக வெளியே வந்தேன். நான் இந்த வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன், அநேக இரவுகள் (கூட்டங்கள்) இருந்தன. மேலும் நான்... மிகவும் பலவீனமடைந் திருந்தேன். கூட்டங்கள் எல்லா நேரமும் மிகவும் வல்லமை வாய்ந்ததாக இருந்தன. நிச்சயமாகவே நீங்கள் அதிகமாக ஆவிக்குள்ளாகின்றீர்கள். 22. நான் இவ்விதமாக நோக்கிப் பார்த்துக் கொண்டிருந் தேன், ஒரு சிறு பையன் சரியாக எனக்கு முன்பாக வெளியில் வைக்கோல் குவியலில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண் டேன். அவன் அந்த வைக்கோல் போரிலிருந்து கீழே விழுந்து, கரடுமுரடாகக் காணப்பட்ட ஒரு பெரிய விளிம்பு சட்டத்தில் மோதினான், அவனுடைய... அவனுடைய முதுகு அதன் மேல் மோதியது. ஒரு மனிதன் அவனைத் தூக்குவதை நான் கண்டேன். நான் அப்படியே பேசத் தொடங்கினேன்; ஒவ்வொரு இரவிலும் சம்பவிப்பதை நீங்கள் காண்பதைப் போலவே, அது அப்படியே சரியாக எனக்கு முன்பாக இருந்தது. என்ன சம்பவித்தது என்பதை அது கூறினது. ஒரு மருத்துவர் அவருக்கு சிகிச்சை செய்வதையும் அவர் எம்மாதிரியான மருத்துவர் என்பதையும் கண்டேன். நான், "தரையில் துளைகளிட்டு, தன்னுடைய படுக்கையை போட்டிருப்ப வரை நான் காண்கிறேன். தரையில் நடக்கும் ஜனங்களோடுநிற்கக் கூட அவரால் முடியவில்லை . மேலும் இப்பொழுது, அவர் கள் ஒரு படுக்கையில் அவரை வைத்துள்ளனர். அவர்கள் மிகவும் துரிதமாக அவரைச் சுற்றி திருப்பி அல்லது அவரை வெளியே எடுத்து இந்தப் படுக்கையில் வைத்துள்ளனர். ஆனால் அவர் ஒரு மகத்தான மனிதராக மாறுகிறார்” என்று சொன்னேன். நான், "இப்பொழுது, அவர் ஒரு மகத்தான மனிதராக கூட ஆகியிருக்கிறார். அவர் சுற்றிலுமுள்ள நீண்ட பலகை இருக்கைகளில் (benches) அல்லது ஏதோவொன்றில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் ஒரு - ஒரு நாற்காலியைப் பெற்றுள்ளனர்... இச்சமயத்திலும் அவரை உள்ளே கொண்டு வந்தனர். மேலும் - மேலும் ஜனங்கள் அவருடைய பேச்சைக் குறித்து கைதட்டி பாராட்டுகின்றனர்” என்றேன். அந்த தரிசனம் என்னை விட்ட கன்றது. 23. நான் நோக்கிப் பார்த்தேன். அவர்கள் ஒரு விமானத்தை விட்டு இறங்கி உள்ளே வந்தனர். இங்கே ஒரு சக்கர நாற்காலி வருகிறது. அவர்கள் அப்படியே கட்டிடத்தின் உள்ளே வந்தடைந்தனர், அது வரத் தொடங்கியது... அது நகர்ந்து வந்து, மீதியா யிருந்த சக்கர நாற்காலிகளுடன் அதுவும் சேர்ந்து கொண்டது. நான், "இப்பொழுது அவர்தான் அந்த வயதான பண்பாளர்" என்றேன். அது ஏறக்குறைய இந்தக் கட்டிடத்தைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்கு தூரத்தில் இருந்தது. நான், "இப்பொழுது, அவர் தான் அந்த வயதான மனிதன்” என்றேன். அவரோ மிகவுமாக அழுதார், நான் முன்னே சென்று ஜெப வரிசையை அழைக்கும்படி என்னுடைய சகோதரரிடம் கூறினேன். எனவே நாங்கள் அவர்களை வரிசையில் கொண்டு வரத் தொடங்கினோம், எனவே அடுத்த காரியம் சம்பவித்தது, ஏன், அவர்க ளிடம் இங்கே ஒரு நீட்டிக்கும் வகையிலான ஒலிப்பெருக்கி (extension mike) இருந்தது. திரு.பாக்ஸ்டர், "சகோதரன் பிரன்ஹாமே, நீர் பேசிக் கொண்டிருந்த அந்த வயதான மனிதர் ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ்காரராக இருக்கிறார். அவர் தான் வில்லியம் D. உப்ஷா” என்றார். நான், "அவர் யாரென்று எனக்குத் தெரியாது” என்றேன். அவர், “இந்த ஒலிப்பெருக்கி வழியாக அவர் உம்மிடம் பேச விரும்புகிறார்” என்றார். அவர், "என் மகனே, நான் ஒரு பையனாக இருந்த போது விழுந்து, என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன் என்று எப்படி உனக்குத் தெரியும்?” என்றார். நான், "என்னால் உங்களிடம் கூற முடியாது, ஐயா. நான் உம்மைக் குறித்து என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை. நான் வருந்துகிறேன்” என்றேன். அவர், “நல்லது, தெற்கத்திய பாப்டிஸ்ட் கன்வென்ஷனுடைய தலைவராக நான் இருந்தேன்” என்றார். “பாப்டிஸ்ட் சபையில் உன்னை நியமித்தவரான டாக்டர். டேவிஸ் தான் உன்னை சந்திக்கும்படியாக இங்கே என்னை அனுப்பினார்” என்றார். நான், "எனக்கு டாக்டர். டேவிஸ் அவர்களுடன் பழக்கமுண்டு” என்றேன். அவர், "எனக்காக ஜெபிக்கப்பட்டுள்ளது. நான் இந்த சக்கர நாற்காலியில் 66 வருடங்களாக நோயாளியாக இருந்திருக்கிறேன்” என்றார். மேலும் அவர், "எனக்கு இப்பொழுது 86 வயதாகிறது. எனக்கு காயம்பட்ட 17 வயதிலிருந்து என்னை சுகமாக்கும்படி தேவனை நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் எப்பொழுதாவது சுகமடைவேன் என்று நினைக்கிறாயா?” என்றார். நான், “என்னால் உங்களிடம் கூற முடியாது, ஐயா. நான் காண்கிறதை மாத்திரமே என்னால் கூற இயலும்” என்றேன். அவர், “என் மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்றார். நான், "அன்பான ஐயா, உமக்கு நன்றி” என்றேன். நான் இந்த வழியாக திரும்பினேன், நான் அவ்வாறு செய்த போது, என் சகோதரனே, கூட்டங்களின் தலைமை உதவியாளர், ஜனங்களை வரிசையில் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டிருந்தார். 24. நான் இந்த வழியாக நோக்கிப் பார்த்தேன், இவ்விதமாக கழுத்துப்பட்டையை கொண்ட மருத்துவருக்கான இந்தக் கோட்டு களில் ஒன்றை அணிந்திருந்த ஒரு வாலிப மருத்துவரைக் கண் டேன். இங்கே அவருடைய தலையின் முன்னால் ஒரு காரியம் இருந்தது. அவர்கள் வெளிச்சத்தைக் காண்பிக்கும்படியான ஒரு விளக்கு (அந்தக் கருவியின் பெயரை மறந்து விட்டேன்). அவர் தன்னுடைய கைகளை மடக்கிக்கொண்டிருந்தார், ஆமை ஓட்டுக் கண்ணாடியை அணிந்திருந்து, தன்னுடைய தலையை அசைத் தார். அத்தரிசனம் அதிகமாக உண்டான போது, நான் அவருக்குக் கீழே நோக்கிப் பார்த்தேன். அங்கே ஒரு சிறிய கறுப்பின பெண் இருந்தாள், அவளுக்கு ஒருவேளை சுமார் ஆறு, ஏழு வயதிருக்க லாம். அவர் அவளுடைய அடிநாச்சதையை (tonsils) வெளியே எடுத்திருந்தார். அது வெற்றிகரமாக முடியவில்லை, அது அவளை முடக்கிப்போட்டது. எனக்கு முன்பாக இருந்த தரிசனத்தை நான் கூறின போது, அங்கே கீழே சற்று தூரத்தில்... ஓ, இந்தக் கட்டிடத்தில் அநேக தடவைகள். நான் "ஆன்ட் ஜெமிமா" வின் குறிப்பிடும்படியான சத்தத்தைக் கேட்டேன், அவள் பெரும் கூச்சலிடத் தொடங் கினாள், அவள் ஒரு பெரிய கனத்த ஸ்திரீ. அவள் அப்படியே அந்த உதவியாளர்களை வலது புறமும் இடது புறமும் தள்ளி விட்டுக் கொண்டிருந்தாள்.... அவளுக்குப் பின்னாலிருந்த ஒரு தூக்குப் படுக்கையை இழுத்துக் கொண்டு வந்தவளாக, அவள், "கர்த்தாவே, இரக்கமாயிரும். அது என்னுடைய குழந்தை தான்” என்றாள். 25. இப்படியிருக்க, அவர்கள் ஒரு கூட்ட ஜனங்களை வரிசைப்படுத்த வேண்டியிருந்தது, ஏனெனில் ஜெப அட்டை இல்லாமல் நீங்கள் நீங்கள் மேடையில் வரக்கூடாது. ஏனெனில் அதுதான் நாங்கள் அதை செய்வதற்கான ஒழுங்கான வழியாகும். நாங்கள் அந்த வழியில் மாத்திரமே அதைச் செய்யக் கூடும். எனவே உதவியாளர்கள் அந்த வரிசையிலிருந்து அவளை விலகிப் போகும்படி செய்ய வேண்டியதாயிருந்தது. மேலும் அவர்கள் அங்கே ஒரு வழியை உண்டாக்க வேண்டியிருந்தது. அவள் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். அவள், "பார்சன், அது என்னுடைய குழந்தை தான். அவள் சுகமாகி விடுவாளா?” என்றாள். நான், "ஆன்ட்டி, எனக்குத் தெரியாது. நான் காண்கிறதை மாத்திரமே என்னால் கூற முடியும்” என்றேன். பாருங்கள்? நான், ஆனால்..” என்றேன். “மருத்துவர் மிகச்சரியாக அவ்விதமாகத் தான் உறுதி செய்துள்ளார். அது சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன்பு சம்பவித்த காரியம்” என்றேன். நான், "அவள் தான் அந்தச் சிறு பெண்" என்றேன். அவளிடமிருந்து இழுத்துப் பறித்த அந்த நீண்ட துணி அவர்களிடம் இருந்தது. நான், "அவள் அதே சிறு பெண்தான்” என்றேன். "நல்லது, அவள் சுகமடைவாளா?" என்றாள். நான், "ஆன்ட்டி, என்னால் உன்னிடம் கூற முடியாது. நான் சரியாக நோக்கிப்பார்ப்பது மாத்திரம் தான் எனக்குத் தெரியும்” என்றேன். நான், "அது தரிசனத்தின் மூலமாக மாத்திரமே” என்றேன். அவள், "நான் ஜெபித்திருக்கிறேன், நான் ஜெபித்திருக்கி றேன், நான் அதற்காக ஜெபித்திருக்கிறேன்” என்றாள். நான், "நல்லது, எனக்குத் தெரியாது, ஆன்ட்டி” என்றேன். நான், "ஹவார்டு, முதலாவது நபரை (வரிசையில்) வரும்படி செய்ய நீ ஆயத்தமாய் இருக்கிறாயா?” என்று கேட்டேன். அவன், “ஆம்” என்றான். 26. ஒரு சீமாட்டி மேலே நடந்து வரத் தொடங்கினாள். நான் மீண்டும் கூட்டத்தினரை நோக்கிப் பார்த்து, அவர்கள் பயபக்தியோடு இருக்கும்படி கூறுவதற்காக திரும்பினேன். ஒரு இருளான கோடு அசைவதைப் போன்று தோற்றமளிப்பதைக் கண்டேன். அது அப்படியே தொடர்ந்து அதைப்போன்று உள்ளே வந்து கொண்டிருந்தது. அது என்னவாக இருந்ததென்றால், அது ஒரு தெரு அல்லது ஏதோவொன்று அல்லது ஒரு சாலையாக இருந் தது. இந்தச் சிறு கறுப்பின பெண் தன்னுடைய கரங்களில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு, அதை முன்னும் பின்னும் இவ்விதமாக ஆட்டிக்கொண்டு அந்தச் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். அது அவள் தான். இப்பொழுது, அதுதான் கர்த்தருடைய வார்த்தை வெளிப்படுவது. பாருங்கள்? இப்பொழுது, என்ன சம்பவிக்கப்போகிறது என்பது காரியமில்லை, நரகத்தின் எல்லா வல்லமைகளும் அதற்கு விரோதமாக அசையக் கூடும். அந்த ஸ்திரீயினிடத்தில் விசுவாசம் கூட இருக்க வேண்டியதில்லை. அவள் எதையும் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்துள்ளார். அது தேவனுடைய வார்த்தையானது உண்மையாக ஆவதாகும். அப்போது நான் கர்த்தர் உரைக்கிறதாவதைக் கொண்டிருந் தேன். நான், "ஆன்ட்டி, நீ எவ்வளவு பயபக்தியுடன் இருந்தாயோ, அவ்வளவாய் தேவன் உனக்கு பலனளித்துள்ளார். உன்னுடைய குழந்தை சுகமாகி விட்டது" என்றேன். அவள் கூச்சலிடத் தொடங்கி, தன்னுடைய குழந்தையை முத்தம் செய்தாள். அவள், "ஓ, பார்சன், என்னுடைய குழந்தை எப்போது சுகமடையும்? எப்போது...?” என்று கேட்டாள். நான், “ஆன்ட்டி, அது இப்பொழுதே சுகமாக இருக்கிறது” என்றேன். நான் சொன்னேன்..... அவள், "அது கூடுமா...?” என்றாள். மேலும் அந்த குழந்தை ... "தாயே, இங்கே நோக்கிப்பார்” என்றேன். அவள் இவ்விதமாக எழுந்தாள். அந்த பரிதாபமான வயதான ஸ்திரீ இதைப்போன்று பின்னோக்கி விழுந்து, கூச்சலிடத் தொடங்கினாள், அந்த ஸ்திரீ மயக்கமுற்று விழுந்தாள். 27. அவர்களை மேலே அழைத்து வந்தனர், சிறிது நேரம் அங்கே சந்தடி இருந்தது. அவர்கள் அந்த சிறு பெண்ணையும், தாயாரையும் எழுப்பினபோது, அவர்கள் ஒருவர் மற்றவருடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு, அந்த ஆயிரக்கணக்கான ஜனங்களின் முன்பாக நடந்தனர், தாயும் மகளும். ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிய அந்த மனிதர் தன்னுடைய முகத்தில் அப்படிப்பட்ட ஒரு ஊக்கம் குன்றிய பார்வையோடு அங்கே நின்றார். அவர் அந்த தூக்குப்படுக்கையை திரும்ப எடுத்துச் சென்றார். நான், "கர்த்தராகிய இயேசுவால் என்ன செய்யக் கூடும் என்பதைக் கண்டீர்களா?” என்றேன். 28. நான் நோக்கிப் பார்த்தபோது, அந்த வயதான காங்கிரஸ் காரர் ஒரு நிழலைப் போன்று இவ்விதமாக நடந்து போய்க் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர் ஒரு நீல நிற கால் சட்டையையும், ஒரு சிவப்பு நிற கழுத்துப்பட்டையும் அணிந்து கொண்டு அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். தரிசனத்தில் மாத்திரம் அவர் பழுப்பு நிற கால் சட்டையை அணிந்திருந்தார், ஒரு வகையான சாக்கலேட் பழுப்பு நிறம், அதில் வெள்ளை நிற வண்ணக் கோடுகள் இருந்தன. நான், "காங்கிரஸ்காரர் அவர்களே, வெள்ளை நிற கோடுகளைக் கொண்ட ஒரு பழுப்பு நிற கால்சட்டை உமக்கு உண்டா?” என்று கேட்டேன். அவர், "என் மகனே, நான் அதை நேற்று தான் வாங்கி னேன்” என்றார். நான், "நீர் மிகவும் பயபக்தியான ஒரு மனிதர், மேலும் அது - இந்த வருஷங்களில் எல்லாம் நீர் தேவனை கனப்படுத்தி யிருக்கிறீர். தேவனை கனப்படுத்தியதற்காகவும், அவரை விசுவாசித்தற்காகவும், தேவன்... இப்பொழுது உம்முடைய கடைசி நாட்களில் சந்தோஷத்தைக் கொடுக்கும்படியாக, உமக்கு பலனளிக் கிறார். காங்கிரஸ்காரர் அவர்களே, உம்மால் நடக்க இயலும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உம்மை சுகமாக்கியிருக்கிறார், அது கர்த்தர் உரைக்கிறதாவது” என்றேன். அவர், "என் மகனே, நான் எப்போது நடக்க இயலும்?” என்று கேட்டார். நான், "காங்கிரஸ்காரர் அவர்களே, சரியாக இப்பொழுதே உம்மால் நடக்க முடியும்" என்றேன். அவர் இருக்கையை விட்டு துள்ளிக் குதித்தார், அதை ஒருபக்கமாக எறிந்தார்..... அவர்கள் அவரை எழும்பப் பண்ணின போது, அவருடைய தோள்களைத் தாங்கினபடி பெரிய கக்கதண்டங்கள் அவரிடம் இருந்தன, மிஸ்டர் ரூஸ்வெல்டைப் போல, நான்.... இதைப் போன்று அவருடைய முதுகில். 29. தேவன் அம்மனிதரை சுகப்படுத்தியிருக்கிறார் என்பது போல் தோன்றிய போது, அவர் வாலிபனாக (பதினேழு வயது) இருந்தது முதற்கொண்டு அவருக்கு 66 அல்லது - அல்லது சரியாக சொன்னால் 86 வயதாவது வரை காத்திருக்கவில்லை. அவருடைய முதுகிலுள்ள எல்லா எலும்புகளும் எளிதில் உடையக் கூடியதாக இருந்தன. ஆனால் அம்மனிதர் 66 வருடங்களாக நோயாளியாக இருந்து, தம்முடைய எண்பத்தாறாவது வயதில் முதல் தடவையாக தம்முடைய காலூன்றி நின்றார். ஏன், நிச்சயமாக, சாத்தான், "அவர் அங்கிருந்து எழும்பினால், நீ அவருடைய முதுகை உடைத்துப் போடுவாய்” என்று கூறி னான். ஆனால் அது சாத்தான் சொன்னது, ஆனால் தேவன் சொல்லியிருந்தார். பாருங்கள்? தேவன் உரைத்திருந்தார். அப்போது வார்த்தையானது ரூபகாரப்படுத்தப்பட்டது. பாருங்கள்? மேலும் அம்மனிதர் சுகமடைந்தவராக சாதாரணமாக நடந்தார். ஐக்கிய நாடுகள், கிரேட் பிரிட்டன் முழுவதும், அறியப்பட்ட உலகம் முழுவதும் கடந்து சென்றார், ஜோசப் ஸ்டாலினுக்கு கூட அதைக் குறித்து ஒரு கடிதம் அனுப்பினார். சர்ச்சிலுடைய தனிப்பட்ட நண்பர். உங்களில் அநேகர் காங்கிரஸ்காரரான உப்ஷா சுகமடைந்த பிறகு அவரைப் பார்த்திருக்கிறீர்கள் என்று ஊகிக்கி றேன். எத்தனை பேர் அவரைப் பார்த்திருக்கிறீர்கள்? அதைக்குறித்து அறிந்தவர்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள்........ 30. இப்பொழுது, அது என்னவாக உள்ளது? அது வார்த்தை ரூபகாரப்படுத்தப்படுதலாகும். அதிக நேரம் எடுத்துக் கொள்ளாம லிருந்தால், நான் சில நிமிடங்களில் இந்த சாட்சியை முடிக்க விரும்புகிறேன். நான் வீட்டிற்கு செல்வதற்காக என்னுடைய பாதை யில் இருந்தேன், வீட்டிற்கு வந்தேன், நான் உள்ளே வந்தவுடன், என்னுடைய மனைவி என்னிடம், "தேனே, உம்முடைய வயதான சிநேகிதர் மரித்துக் கொண்டிருக்கிறார்” என்றாள். நான், "யார்?” என்று கேட்டேன். "திரு.ஹால்" சிறுமியான ஜார்ஜி கார்டர் ஒன்பது வருடம் எட்டு மாதங் களாக படுக்கையிலேயே படுத்திருந்தாள், தெற்கில் 35 மைல்கள் தொலைவில்.... அந்தப் பட்டணத்தைக் குறித்து - அந்த சிறு இடத்தைக் குறித்து என்னுடைய ஜீவியத்திலேயே ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கவில்லை. கர்த்தர் ஒரு தரிசனத்தைக் கொடுத் தார். கர்த்தர் அங்கே இறங்கி வந்து, அவளை சுகமாக்கினார். அவள் ஒன்பது வருடம் எட்டு மாதங்களாக 35 பவுண்டுகள் எடை கொண்டவளாய் படுக்கையில் படுத்திருந்த பிறகு, அவள் படுக் கையை விட்டு எழும்பினாள். நீங்கள் அவளுக்கு எழுத விரும்பினால், அவளுக்கு எழுதலாம். செல்வி. ஜார்ஜி கார்டர், மில் டவுன், இன்டியானா. இப்பொழுது, அவள் மில்டவுன் பாப்டிஸ்ட் சபையில் எனக்கு பியானோ இசைக்கருவியை இசைப்பவளாக இருக்கிறாள். 31. அதன்பிறகு திரு. ஹால் அவர்கள் மனந்திரும்பினார். அவர் மிக மிக மோசமான ஒரு மனிதராக இருந்தார். அதே கூட்டத்திலேயே அவர் மனந்திரும்பினார். அவர் இப்பொழுது அங்கே மேய்ப்பராக இருக்கிறார். எனவே.... அவள், "திரு.ஹால் அவர்களுக்கு கல்லீரலில் புற்று நோய் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அவர் தம்முடைய சகோதரியின் வீட்டில் படுத்த படுக்கையாய் உள்ளார், அவருடைய சகோதரி பட்டணத்தின் நீதிபதியினுடைய சகோதரனை விவாகம் பண்ணி யுள்ளாள், அவள் அவருடைய வீட்டில் தங்கியிருக்கிறாள். அவர்கள் அவரை இங்கே கொண்டு வந்தனர். அவர் மரித்துக் கொண்டிருக்கிறார். அவர் உம்மை அழைத்துக் கொண்டேயிருக்கி றார்” என்றாள். நான், “நல்லது, நாம் கீழே சென்று அவரைப் பார்க்கலாம்” என்றேன். நான் சகோதரன் ஹால் அவர்களைப் பார்ப்பதற்காக கீழே சென்றேன். அவர் அப்படியே எவ்வளவு இருக்குமோ அவ்வளவாக மஞ்சள் நிறத்தில் காணப்பட்டார். கல்லீரலில் இருந்த புற்று நோயானது, கல்லீரல் தசைகள் இறுகி, கடினமாக சொர சொரப்பாக மாறத் தொடங்கி, அது புற்று நோயாக மாறி விட்டி ருந்தது. நான், "சகோதரன் ஹால், உங்களுடைய மருத்துவர் யார்?” என்று கேட்டேன்.) அவர், “டாக்டர். டில்மன்” என்றார். டாக்டர் டில்மன் அவர்கள் என்னுடைய ஆத்ம நண்பர். நான், "சகோதரன் ஹால், அதைக் குறித்து என்ன?" என்றேன். அவர், "நல்லது, சகோதரன் பிரன்ஹாம், இது தான் என்னுடைய பாதையின் முடிவு என்று ஊகிக்கிறேன். கர்த்தர் எனக்காக பொறுப்பெடுத்துக் கொள்ளாவிட்டால், செய்யக்கூடியதெல்லாம் அவ்வளவு தான் என்று ஊகிக்கிறேன்” என்றார். நான், "நல்லது, சகோதரன் ஹால், நான் ஜெபிக்கப் போகிறேன்" என்றேன். நாங்கள் ஜெபித்தோம். மேலும் அடுத்த நாள் திரும்பவும் போனேன்; அவர் மோசமான நிலையில் இருந்தார். இரண்டாவது நாள் இன்னும் மோசமானார். அவர் மரித்துக் கொண்டிருந்தது போன்று காணப்பட்டது. திருமதி. ஹால் வெளியே வந்து, "சகோதரன் பிரன்ஹாமே, உமக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டாள். நான், "சகோதரி ஹால், நான் தேவனிடம் என்னுடைய முழு இருதயத்தோடும் (அவருக்காக) முறையிட்டுள்ளேன்” என்றேன். வார்த்தையானது இன்னும் தேவனுடைய வார்த்தையாக உள்ளது. ஆனால் அது அப்போது வெறுமனே கீழே விழவில்லை. பாருங்கள்? அது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அது அவருக்கு அருளப்பட்டிருக்கவில்லை. ஆனால் அது இன்னும் தேவனுடைய வார்த்தையாக உள்ளது, அது சரியாக நங்கூரமிடப்பட்டிருக்கவில்லை. 32. எனவே நாங்கள் மீண்டும் கீழே சென்றோம். திருமதி. ஹால், "சகோதரன் பிரன்ஹாமே, அவருக்காக உம்மால் செய்யக் கூடியது ஏதாகிலும் உண்டா ?” என்று கேட்டாள். நான், "இப்பொழுது...” என்றேன். “வேறு எந்த மருத்துவரையாவது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டாள். நான், "மருத்துவர்கள் மற்ற எதையும் போல இருப்பவர்கள் தான், நீ அவர்களிடத்தில் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும். இங்கே இந்த பட்டணத்திலுள்ள டாக்டர். சாம் அடேயர் தான் எங்களுடைய மருத்துவர்" என்றேன். அவர் மிகவும் அருமையான மனிதர், நான் அவருடன் பள்ளிக்குச் சென்றேன். நாங்கள் ஒன்றாக மீன் பிடித்தோம், ஒன்றாக வேட்டையாடினோம், ஒன்றாக விளையாடினோம், இப்பொழுது ஒன்றாக வேலை செய்கிறோம். அவர்களால் மருத்துவ ஆதிக்கங்களில் கையாள முடியாத அவரு டைய நோயாளிகளை அவர் அனுப்புகிறார்; அவர், "சகோதரன் பிரன்ஹாமிடம் விரைந்து சென்று, பாருங்கள்...'' என்று அவர்க ளிடம் கூறுவார். அவருக்காக என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நிச்சயமாக காண வேண்டும். நாம் எப்பொழு தாவது சிறிது கழிந்து அதற்கு வரலாம். 33. ஆனால் நீங்கள் அவருக்கு எழுதி அதைக் குறித்து அவரிடம் கேளுங்கள். அவர் ஒரு சிறப்பு மருத்துவர். நான் டாக்டர். அடேயரை அழைத்து, அவர் சென்று திரு. ஹால் அவர் களை காண்பாரா என்று அவரிடம் கேட்டேன். அவர், "நான் அந்த மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரேகளைப் பார்க்கப் போகிறேன்” என்றார். அவர் சென்றார். அவர் என்னைத் திரும்பவும் அழைத்து, "சரிதான், பில்லி. அவருக்கு புற்று நோய் உள்ளது” என்றார். "நீர் அவரை அனுப்பக்கூடிய ஏதாவது இடம் இருக்கிறதா என்று உம்மிடம் கேட்கிறேன்.” "நீர் அவரை லூயிவில்லிலுள்ள ஏபிளின் மருத்துவமனைக்கு அனுப்பி, பரிசோதிக்க வேண்டும்” என்றார். ஒரு - ஒரு ஆம்புலன்ஸை கொண்டு வந்து, அவரை அங்கே அழைத்துச் சென்றனர். அவர் அப்போது ஏறத்தாழ மரித்த நிலையில் இருந் தார். அவரை அங்கே கொண்டு சென்றனர், அவர்கள் கண்ட றிந்த வியாதியைக் குறித்து அவர்களிடம் தெரிவிக்கவில்லை. டாக்டர். அடேயரை திரும்பவும் அழைத்தனர். அவர் என்னை அழைத்தார்; அவர், "பில்லி” என்றார். "ஆம்." "போதகரான உம்முடைய நண்பர் நான்கு நாட்களில் கப்பலிலிருந்து வெளியே குதிக்கப் போகிறார்.'' நான், "டாக்டர் அவர்களே, அவர் மரிக்கப் போகிறாரா?” என்று கேட்டேன். அவர், “ஆம்” என்றார். நான், "என்னே. உம்மால் எதுவும் செய்ய முடியாதா?" என்றேன். அவர், "பில்லி, அவருடைய கல்லீரலை (அறுத்து) வெளியே எடுத்தால், அவரால் ஜீவிக்க முடியாது. எதுவுமே செய்ய முடியாது. அம்மனிதர் மரித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு போதகராக இருக்கிறார். அவர் (மரிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும்” என்றார். நான், "ஓ, அவர் ஆயத்தமாயிருக்கிறார். ஆனால் அவர் ஒரு வாலிபராக இருக்கிறார். அவருக்கு 55 வயதுக்கு மேல் ஆக வில்லை. அவர் கர்த்தருக்காக செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் அநேகம் உள்ளன. தேவன் ஏன் அவரை எடுக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” என்றேன். அவர், "நல்லது, பில்லி, எவரேனும் ஒருவர் அதைப் புரிந்து கொள்வது கடினமானது. நாம் அப்படியே அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்” என்றார். நான், "அது சரிதான்" என்றேன். எனவே என்னுடைய சகோதரி ஹால் அவர்களிடம் போய் அதைக் கூறுவது கடினமான ஒரு காரியமாக இருந்தது. 34. ஆனால் நான் அந்த இரவில் கீழே சென்றேன், நான், "சகோதரி ஹால், நான்கு நாட்களில் திரு. ஹால் அவர்கள் போய் விடுவார் என்று மருத்துவர் சொன்னார். அவர் நான்கு நாட்களில் மரிக்கப் போகிறார்” என்றேன். அவள் அழத்தொடங்கினாள். நான், "இப்பொழுது, சகோதரி ஹால், அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் போக ஆயத்தமாயிருக்கிறார். இந்த பூமிக்குரிய கூடாரமானது அழிந்து போனாலும், நமக்காக ஏற்கனவே ஒன்று காத்திருக்கிறது” என்றேன். பாருங்கள்? நான், "அவர் போவது நல்லது. நிச்சயமாக நீ தனிமையானவளாக ஆகப் போகிறாய். இப்பொழுது உன்னுடைய வயதில் பிள்ளையற்றவளாக இருக்கிறாய், நிச்சயமாக நீ தனித்தவளாக போகிறாய். ஆனால் தேவன் நலமானது எது என்பதை அறிவார் என்றும், அவர் சிறந்த விதத்தில் கிரியை செய்கிறார் என்பதையும் நீ ஞாபத்தில் வைத்தாக வேண்டும்” என்றேன். அவள், "சகோதரன் பிரன்ஹாமே, தேவன் உம்மிடம் அதைக் குறித்து எப்பொழுதாவது ஒரு வார்த்தை பேசினதுண்டா?” என்று கேட்டாள். நான், “சகோதரி ஹால், அவர் ஒரு காரியத்தையும் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய முழு இருதயத்தோடும் நான் ஜெபித்தேன். அவர் அப்படியே ஒருவேளை அவரை மரிக்கும்படி அனுமதிக்கப் போகிறார்” என்றேன். "அவர் மரிக்கப்போகிறார் என்று நீர் எண்ணுகிறீரா?” என்றாள். நான், "ஆம், அவர் மரிக்கப்போகிறார் என்று நான் நம்புகிறேன். அவர் மரிக்கப்போகிறார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் எல்லா ஆதாரங்களும், ஒவ்வொன்றும் அவருக்கு விரோதமாக உள்ளது, சகோதரி ஹால்" என்றேன். நான், "எல்லாமும்... நான் அறிந்துள்ள வரையில், எதுவுமே செய்ய முடியாது. அது கர்த்தருடைய சித்தமாக இருக்க வேண்டும். என்னால் கூற முடியாது” என்றேன். எனவே அவள் அழத்தொடங்கினாள், பரிதாபமான வயதான சகோதரி. அவர் பிழைப்பது அரிது. இப்பொழுதோ எப்பொழுதோ என்ற நிலைக்கு வந்து விட்டார். பெரும்பாலான நேரங்களில் அவர் சுயநினைவற்றவராகவே இருந்தார். 35. அடுத்த நாள், நான் வெளியே போகும் நாளாக இருந்தது. நான் - அணில் வேட்டையாட எனக்கு விருப்பம். ஆனால், என்னிடம் சிறிய .22 ரக துப்பாக்கி இருந்தது. நான் சிறிது இளைப்பாறும்படி காடுகளில் சென்று அணில் வேட்டையாட போகும்படியாக இருந்தேன். நான் வழக்கமாக வெளியே சென்று ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து உறங்கச் செல்வேன், எஞ்சிய நாளெல்லாம் உறங்கிக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் கூட்டத்தினரிடமிருந்து அப்படியே சிறிது விலகி இருக்கிறேன், ஏனெனில் அங்கே வீட்டைச் சுற்றிலும் என்ன உள்ளதென்று உங்களுக்குத் தெரியும். அடுத்த நாள் காலையில், மிகவும் அதிகாலையில் - நாங்கள் வீட்டில் ஏறக்குறைய 12 அல்லது 1 மணி வரை கூட்டத்தினரோடு இருந்தோம். மூன்று மணிக்கு எழுந்திருக்கும்படியாக நான் அலாரம் வைத்திருந்தேன். நான் மிகவும் அதிகாலையில் தூக்கத்தை விட்டு எழும்பி, என்னுடைய சிறிய அணில் வேட்டை யாடும் துப்பாக்கியையும் என்னுடைய பழைய தொப்பியையும் எடுத்துக் கொண்டு, அணில் வேட்டையாட வெளியே போகத் தொடங்கினேன். நான் வெளியே பாதையில் நோக்கிப்பார்த்தேன். வெளியே யாருமேயில்லை, எனவே நான்... நான் அறையினூடாக போகத் தொடங்கின போது. நான் முகப்புக் கூடத்திற்குள் போன போது, அந்த அறையில் ஏறக்குறைய (இந்த அளவு) பெரிதான ஒரு சிறிய ஆப்பிள் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருந்தது, அது பச்சை நிறத்தில், முடிச்சுகள் உள்ளதாய், புழுக்களால் அரிக்கப் பட்டிருந்தது. நான், "என்னுடைய மனைவி அதை எதற்காக சுவரில் வைத்துள்ளாள்? அது பயங்கரமாக தோற்றமளிக்கிறதே” என்று எண்ணினேன். அந்த சிறிய ஆப்பிள் பழங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், தூவப்பட்டிராத ஒரு மரத்தை விட்டு வெளியே, நீங்கள் அறிவீர்கள், அப்படியே அதிக முடிச்சுகள் உள்ளதாய் கடினமானதாக தோற்றமளிக்கும் ஒரு காரியமாக அது காணப்படும். எனவே நான், “அவள் எதற்காக அதை சுவரில் வைத்தாள்” என்றேன். நான் போகத் தொடங்கினேன். நான் மீண்டும் அதை நோக்கினேன். அது சுவரில் இருக்கவில்லை; அது சரியாக நடுவில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அங்கே அதைக் குறித்து ஏதோவொன்று இருந்தது என்று நான் தெளிவாக உணர்ந்தவனாக முழங்கால்படியிட்டேன். நான், "என்னுடைய பரலோகப் பிதா தம்முடைய ஊழியக்காரன் என்ன அறிய வேண்டுமென்று விரும்புகிறார்?” என்றேன். 36. நான் நோக்கிப் பார்த்தேன், இங்கே வேறொன்று அதன் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அவைகளில் ஐந்து (ஆப்பிள்கள்) தொங்கும் வரை அது நடந்தது, ஏறக்குறைய - கொத்துக்களாக உள்ள ஐந்து சிறிய முடிச்சுகள் உள்ள ஆப்பிள்கள். அதன்பிறகு, மஞ்சள் நிறத்திலும், அதில் சிவப்பு வரிகள் உள்ளதுமான ஒரு மகத்தான பெரிய ஆப்பிள் கீழிறங்கி வந்தது. அது அப்படியே இதைப்போன்று கடிப்பது போன்று பெரிய சத்தத்தை உண்டாக்கியது, அது "சாம்ப், சாம்ப், சாம்ப், சாம்ப்” என சத்தமுண்டாக்கி, ஐந்து முழு ஆப்பிள்களையும் தின்றது. பிறகு அந்த ஆப்பிள் மறைந்து விட்டது, இந்த ஒளியானது (நீங்கள் அனைவரும் இங்கே கண்டிருந்த அந்தப் படத்திலிருந்த அந்த ஒளி), சரியாக அதற்கு மேலாக தொங்கிக் கொண்டிருந்து, “வியூயூயூ” என போய்க் கொண்டிருந்தது, நான், “என்னுடைய கர்த்தர் தம்முடைய ஊழியக்காரன் என்ன அறிய (விரும்புகிறார்)?" என்றேன். அவர், "உன்னுடைய காலூன்றி நில்” என்றார். நான் எழுந்து நின்றேன். அவர், "கர்த்தர் உரைக்கிறதாவது, திரு. ஹால் மரிக்காமல் உயிர்வாழ்வார் என்று அவரிடம் போய் சொல்” என்று சொன்னார். அதுதான் அது. அந்த நாளில் அணில் வேட்டையில்லை. நான் திரும்பி ஓடிச் சென்று என் மனைவியை எழுப்பி, அதைக் குறித்து அவளிடம் சொன்னேன். அவள், "ஓ, நான் உங்களுடன் வரலாமா?” என்றாள். நான், "ஆம்” என்றேன். நாளின் இடைவேளையில் நாங்கள் ஆயத்தமாகி, கீழே சென்றோம். திரு. ஹால்.... அவர்கள் அவரை திரும்ப கொண்டிருந்து, அவருடைய கரங்களையும் காரியங்களை யும் தேய்த்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளே சென்றேன். நான் - நான், "அவர் போகவில்லையா?” என்றேன். வில்லை, ஆனால் அவர் மரித்துக் கொண்டிருக்கிறார்” என்றார். அவர், "அவர் போராடிக் கொண்டிருக்கிறார்" என்றார். அவருடைய கண்கள் பின்னிட்டுத் திரும்பியிருந்தன. நான், "சகோதரி ஹால்” என்றேன். அவள், "நீங்கள் எதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியுள்ளவராய் இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். "நான் கர்த்தர் உரைக்கிறதாவதைக் கொண்டிருக்கிறேன்" என்று நான் கூறினேன். ஓ, அப்போது அதற்கு என்ன அர்த்தம் என்று ஒருவருக்கும் ஒருபோதும் தெரியாது. அவள், "அது நல்ல விஷயமா?" என்றாள். நான், “ஆம்” என்றேன். "ஓ, என்ன?" என்றாள். மேலும் நான், "இப்பொழுது சற்று வாருங்கள். எல்லாரையும் படுக்கையைச் சுற்றிலும் கூடிவரச் செய்யுங்கள்” என்றேன். நாங்கள் படுக்கையைச் சுற்றிலும் கூடி வந்தோம். திரு.ஹாலின் கண்கள் இதைப்போன்று பின்னிட்டுத் திரும்பியிருந்தன. அவர் மிகவும் மஞ்சள் நிறத்தில் இருந்தார். அவர், "யாராவது அவருடைய கரத்தை தேய்த்து விடுங்கள்” என்று தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டேயிருந்தார். நான், "சகோதரன் ஹால், நான் சொல்லுவதைக் கேட்க முடிகிறதா?” என்றேன். அவர், "அது யார்?” என்றார். நான், "இது சகோதரன் பில்” என்றேன். அவர், "ஓ, சகோதரன் பில், நான் இன்னும் போகவில்லையா?” என்றார். நான், "சகோதரன் ஹால், நீர் இப்பொழுது போகப் போவதில்லை. நான் கர்த்தர் உரைக்கிறதாவதைக் கொண்டிருக்கிறேன். நான் இன்று காலையில் ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்கு முன்பு ஒரு தரிசனத்தில் கண்டேன்" என்றேன், அது என்னவென்று அவரிடம் கூறினேன். மேலும் நான், "சகோதரன் ஹால், நீர் ஜீவிக்கப்போகிறீர்” என்றேன். 37. அந்த அறையை விட்டு வெளியே நடந்து, வீட்டுக்குச் சென்று, டாக்டர். அடேயரை அழைத்து, நான், “டாக்டர். அடேயர்” என்றேன். நான், "அம்மனிதர் நான்கு நாட்களில் கப்பலை விட்டு வெளியே குதிக்கப்போகிறார் என்று உமக்குத் தெரியுமா?” என்றேன். "ஆம். அவர் மரித்து விட்டாரா?” என்றார். நான், “இல்லை, அவர் மரிக்கப் போவதில்லை” என்றேன். அவர், “நீர் என்ன சொல்லுகிறீர்?" என்றார். நான் சொன்னேன்... அவர், "அவருக்குள் அந்த புற்று நோயை வைத்துக் கொண்டு அவரால் எவ்வாறு ஜீவிக்கப் போகிறார்?” என்றார். நான், "எனக்குத் தெரியாது, ஆனால் அவர் ஜீவிக்கப் போகிறார், எனெனில் கர்த்தர் அவ்வாறு சொல்லியிருக்கிறார்” என்றேன். அதுதான் ஐயத்துக்கிடமின்றி தேவனுடைய வார்த்தையாக உள்ளது. பாருங்கள் ? அங்கே அது உள்ளது. அது இங்கே சரியான நிலத்தில் உள்ளது, பிறகு.... அதன்பிறகு அவர், "நல்லது, பில்லி, நான் உம்மை சந்தே கிக்க ஒருபோதும் விரும்பவில்லை. அநேக காரியங்கள் செய்யப் பட்டதை நான் பார்த்திருக்கிறேன். நான் என்னுடைய ஜீவியத்தில் உன்னை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை, ஆனால் இந்த வயதான மருத்துவர் அதைக் காண வேண்டும்” என்றார். நான், "நல்லது, நீர் அதைக் காணும் வரை, வயதானவராய் மரிக்க மாட்டீர். நீர் - நீர் அதைக் கண்டு கொள்வீர்” என்றேன். நான் பென்சில்வேனியாவிலுள்ள எரிக்குச் (Erie, Pennsylvania) சென்றேன். அங்கே அதனூடாக ஆறு வார சுற்றுப்பயணம் மேற் கொண்டு விட்டு, ஒரு நாள் திரும்பி வந்தேன். நான் அதற்குப் பிறகு ஆப்பிரிக்காவிற்குப் போனேன். 38. நாங்கள் அங்கே ஒரு உயர்நிலைப்பள்ளி உடற்பயிற்சி கூடத்தைக் கொண்டிருந்தோம். அதில் ஏறக்குறைய 5500 ஜனங் கள் உட்கார்ந்திருந்தனர். நான் அறிந்துள்ள எல்லாவற்றின்படியும், உங்களில் சிலர் ஒரு வேளை அந்த இரவில் அங்கே இருந்திருக் கலாம். இந்த ஜனங்கள் கூட ஒருவேளை இருந்திருக்கலாம். அந்த உடற்பயிற்சி கூடத்தில் நாங்கள் ஒரு இரவைக் கொண் டிருந்தோம்.... எனவே அநேகர் அங்கே உள்ளே இருந்தனர், ஏறக்குறைய அதே அளவு ஜனங்களை அவர்கள் வெளியேயும் கொண்டிருந்தனர், இந்த ஒரு இரவுக்காக அவர்களை ஒழுங்கு படுத்த காவல் துறையினர் அங்கே வெளியே முயற்சித்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளே சென்ற போது, அவர்கள் எங்கே இருந்தனர் என்பதைக் காணக்கூடாத அளவுக்கு ஜனங்கள் அப்படியே எல்லா இடங்களிலும் குவிந்திருந்தனர். நான் எனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களை பார்க்க நேர்ந்தது. அங்கே என்னுடைய நல்நண்பரான டாக்டர். பால்டன் இருந்தார். நான்... அவருடைய மனைவி என்னுடைய வீட்டில் வைத்து ஆஸ்துமா வியாதியிலிருந்து சுகமாக்கப்பட்டிருந் தாள். நான், “டாக்டர். பால்டன் அவர்களே, உம்மைக் காண்பதில் மகிழ்ச்சி” என்றேன். அவர், "பில்லி, உமக்கு நன்றி” என்றார். அவர் எழுந்து நின்றார். விளையாட்டு மைதானத்தில் திறந்த வெளி பலகை இருக்கை களில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களை நோக்கிப் பார்த்தேன், அங்கே காரிடானிலிருந்து வந்திருந்த டாக்டர். டில்மன் உட்கார்ந் திருந்தார். நான், "மருத்துவரே, எப்படியிருக்கிறீர்கள்? இன்றிரவு இங்கே உள்ளே உம்மைக் காண்பதில் மகிழ்ச்சி” என்றேன். கதவருகில் நின்று கொண்டிருந்தவர்களைக் காண நேர்ந்தது, அங்கே டாக்டர். சாம் அடேயர் நின்று கொண்டிருந்தார். அவரால் உள்ளே வர முடியவில்லை . நான், "டாக்டர். அடேயர், எப்படி இருக்கிறீர்கள்?" என்றேன். நான், "நீர் உட்கார எங்களிடம் இருக்கை இல்லாமலிருப்பதற்காக நான் வருந்துகிறேன், ஆனால் கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்றேன். ஆம். நான் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களை காண நேர்ந்தது, அங்கே எல்லாருக்கும் பின்னால் சகோதரன் ஹால் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் இவ்விதமாக என்னிடம் கரத்தை அசைத்துக் காட்டினார், உங்களுக்குத் தெரியும். 39. நான், "டாக்டர் டில்மன் அவர்களே, சிறிது காலத்திற்கு முன்பு, நீங்கள் இங்கே கொண்டிருந்த வில்லியம் ஹால் என்னும் பேருடைய ஒரு நோயாளியை உமக்கு ஞாபகம் உள்ளதா?" என்று கேட்டேன். நான், "டாக்டர். அடேயர், நான்கு நாட்களில் கப்பலை விட்டு வெளியே குதிக்கப் போவதாகவும், அந்த வயதான மருத்துவர் அதைக் காண வேண்டும் என்றும் நீர் சொல்லியிருந்தவரை உமக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அவர் தெளிவாக, "ஆம்” என்றார். நான், "சகோதரன் ஹால், நீங்கள் சாட்சி கூற விரும்புகிறீர்களா?” என்றேன். அவர், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் சாட்சி கூற விரும்புகிறேன், அதைச் செய்யலாமா?” என்றார். அவர் எழுந்து அங்கே சாட்சி கூறினார். அதே இரவில் அவரை வெளியே எடுத்துக் கொண்டு வந்து, பரிசோதித்தனர், அதனுடைய ஒரு அடையாளத்தையும் எங்குமே காண முடியவில்லை. 185 பவுண்டு கள் எடையுள்ளவராய் பரிபூரண ஆரோக்கியத்தோடு இருந்தார். நீங்கள் அவருக்கு எழுத விரும்பினால், சங்கை வில்லியம் ஹால், மில்டவுன், இந்தியானா (என்ற முகவரிக்கு எழுதுங்கள்). 40. இப்பொழுது ஜெபவரிசைக்கு 6 நிமிடங்கள் உள்ளன. ஒருவேளை இன்னும் ஒரு சிறு சம்பவம். "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; தேவன் அவர்களை எழுப்புவார்." நீங்கள் நம்பிக்கையின்மேல் உங்கள் விசுவாசத்தை அஸ்திபாரப் படுத்த முடியாது. நீங்கள்... விசுவாசமானது திடமானது. ஆரோக் கிமான பார்வையை பெற்றுள்ள ஒவ்வொரு நபரும் என்னுடைய சட்டையைப் பார்த்து அது வெள்ளை நிறத்தில் உள்ளது என்று கூறலாம். புலன்களில் ஒன்று அது வெள்ளை நிறத்தில் உள்ளது என்று உறுதியாகக் கூறுகிறது. இப்பொழுது, நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருந்து, அது நீங்கள் சுகமடையப்போகிறீர்கள் என்று கூறுமானால், உங்களு டைய பார்வையானது அது வெள்ளை நிறத்தில் உள்ளது என்று கூறுவது போன்று அப்படியே உண்மையாகவும், உறுதியான தாகவும் அது உள்ளது. அப்போது நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கிறீர்கள். அது சம்பவிக்கப்போகிறது. ஆனால் அது உண்மையானதாக இருக்க வேண்டும்.... அதை நிரூபிக்க ஏதோவொரு உறுதிப்பாடு இருக்க வேண்டும். 41. நாம் மிசௌரிக்கு மிக அருகாமையில் இருக்கிறோம்; அது "எனக்கு காண்பி” என்று (கூறும்) மாகாணமாக உள்ளது. அவர்கள், "காண்பது தான் விசுவாசிப்பதாக உள்ளது” என்கின்றனர். நீங்கள் அதைக் கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள்... எத்தனை பேர் அந்த பழங்கால பேச்சு வழக்கை எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்கள்? பாருங்கள்? அது எவ்வளவு முட்டாள்தனமானது என்று நாம் சற்று பார்க்கலாம். சகோதரன் பிரிவர், இங்கே வாருங்கள். உங்களுக்கு நன்றி. கருமையான தலைமுடியோடும், நீண்ட வரி போட்ட கழுத்தணி யையும், சாம்பல் நிற (சாம்பல் நிறத்துக்கும் பழுப்பு நிறத்துக்கும் இடைப்பட்ட நிறம் என்று கூறுகிறேன்) கால்சட்டையையும் அணிந் துள்ள ஒரு மனிதர் எனக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார். அது உண்மையென்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? யாரும் அவரைப் பார்த்து அதை விசுவாசிக்க முடியும். இப்பொழுது, அந்த மனிதர் அங்கே நின்று கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி மாத்திரமே உண்டு; அது பார்வையின் மூலமே. அதுதான் காணுதல். 42. இப்பொழுது, அந்த மனிதர் அங்கே இருக்கிறார், என்னால் அவரைக் காண முடியவில்லை. அவர் அங்கே இருக்கிறார் என்பதை நான் இன்னும் அறிந்துள்ள போதிலும், நான் அவரைக் காண்பதற்கு எனக்கு எந்த வழியுமே இல்லை. நான் அவரைக் காண்பேனானால், அது எவ்வளவு உண்மை யாக இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையாக அவர் அங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவர் அங்கே இல்லையென்று நீங்கள் என்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பலாம்; இப்பொழுது, பார்த்தல் என்பது விசுவாசித்தல் அல்ல, அப்படித் தானே? அதை உணரும்படியான வேறொரு புலத்தை நான் பெற்றிருக்கிறேன். அவர் அங்கே இருக்கிறாரென்று என்னால் உணர முடியும். எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையாக அவர் இருக்கிறார் - நான் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்தல் என்பது விசுவாசித்தல் அல்ல; இப்பொழுது உணருதல் தான் விசுவாசித்தலாக உள்ளது. இப்பொழுது, அவரை உணருவது என்பது எனக்கு கூடாத காரியமாயிருக்கிறது. அவரை தொடர்பு கொள்ளவே மாட்டேன். அவர் அங்கே இருக்கிறார் என்று நான் இன்னும் விசுவாசிக்கிறேன், ஏனெனில் நான் அவரைக் காண்கிறேன். திரும்பி, அந்த பியானோவில் ஒரு சுருதியோ இரண்டு சுருதியோ வாசியுங்கள் (நன்றி, சகோதரன் பிரிவர்). எத்தனை பேர் அதைக் கேட்டீர்கள். எத்தனை பேர் அந்த இசையைப் பார்த்தீர்கள்? பார்ப்பது தான் விசுவாசிப்பது என்று நான் எண்ணினேனா? பார்ப்பது விசுவாசிப்ப தல்ல; அங்கே கேட்பது தான் விசுவாசிப்பதாக உள்ளது. அது சரியா? நீங்கள் அதைக் கண்டீர்களா? இல்லை. நீங்கள் அதை உணர்ந்தீர்களா? நீங்கள் அதை ருசித்தீர்களா? நீங்கள் அதை முகர்ந்தீர்களா? இல்லை. நீங்கள் அதைக் கேட்டீர்கள். இப்பொழுது, விசுவாசமானது நம்பப்படுகிறவைகளில் உறுதியும், காணப்படாதவைகளின், ருசிக்கப்படாதவைகளின், உணரப் படாதவைகளின், முகரப்படாதவைகளின் அல்லது கேட்கப்படாத வைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. பாருங்கள்? அது அப்படியே ஒரு உறுதியான உண்மையாய் உள்ளது; நீங்கள் அதை அறிவீர் கள். பாருங்கள்? அது ஏதோவொரு இடத்தில் அஸ்திபாரம் போடப்பட்டிருக்க வேண்டும், அப்படியே பொய்யான கட்டுக் கதையின் மேலல்ல; அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில் அஸ்திபாரம் இடப்பட்டிருக்க வேண்டும். அப்போது அது எங்கே உள்ளதென்று நீங்கள் அறிவீர்கள். அப்போது அது - அது சரியாக இருக்கிறது. அது சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கச் செய்யும். 43. சங்கை திரு. ஜான்சன் அவர்கள், நான் நெடுநாள் அறிந்துள்ளபடி, அவர் ஒருவேளை இப்பொழுது இங்கே இருக்க லாம். நான் ஒரு பாப்டிஸ்ட் போதகராக இருந்தேன்; அவர் ஒரு மெதொடிஸ்ட்டாக இருந்தார், நாங்கள் வழக்கமாக எழுப்புதல் களைக் கொண்டிருந்தோம். நாங்கள் இருவருமே கென்டக்கியின் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர் இந்தியானாவுக்கு இடம் பெயர்ந்து வந்து, பிரதான வீதி மெதொடிஸ்ட் சபையின் மேய்ப்பராக இருந்தார், அது நியூ ஆல்பனியிலுள்ள ஒரு அருமையான பெரிய சபையாகும். நான் ஜெபர்ஸன்வில்லில் ஒரு சிறிய கூடாரத்தைக் கொண்டிருந்தேன். கர்த்தர் கூட்டங்களை ஆசீர்வதிக்கத் தொடங்கின பிறகு, அவர் வந்து சொல்லத் தொடங்கி, "பில்லி, நீர் நிச்சயமாக வந்து, ஒரு இரவில் கூட்டம் நடத்த வேண்டும்” என்றார். நான், “சகோதரன் ஜான்சன், வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போவதில்லை. நான் இளைப்பாறுவதற்காக வீட்டில் இருக்கிறேன்” என்றேன். அவர், "நல்லது, நீர் வெறுமனே வந்து ஒரு இரவில் எனக்காக பிரசங்கம் செய்ய வேண்டும்” என்றார். நல்லது, நான் அவ்வாறே செய்தேன். அவர், "நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி உம்மிடம் கேட்க மாட்டோம் என்று உமக்கு வாக்குக் கொடுக்கிறோம்” என்றார். நான், “எனக்கு விருப்பமில்லை என்பதல்ல, ஆனால் அதைக் குறித்த காரியம் என்னவெனில், நான் - நான்... நாம்... நான் என்னுடைய வீட்டில் ஐந்து வருடங்களாக ஜீவித்து வருகிறேன், ஒரு முறை கூட சமையலறை ஜன்னல் திரை மூடப்படாத நிலையில் நான் ஒருபோதும் வீட்டில் சாப்பிட்டதில்லை” என்றேன். ஜனங்களுடைய... அது.... அது அப்படியே வீட்டிற்கு வருவது. வீடு என்பது வீடாக இருக்கவில்லை. ஆனால் நீங்கள் யாரோ ஒருவருக்கு உதவி செய்யக் கூடுமானவரை அது சரிதான். பாருங்கள்? 44. எனவே அது மிகவும் மோசமடையும் போது, நான் விடுமுறை எடுத்துக் கொண்டு எங்கோ மேலே மலைக்குப் போய், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் இளைப்பாறி விட்டு, திரும்பி வருகிறேன். எனவே அப்போது.... அந்த இரவில் சபைக்குச் சென்றேன், அவர்களால் முடியவில்லை... அவர்கள் பின்னால் இருந்த பலகணி வழியாக என்னை உள்ளே கொண்டு வந்தனர். (இரண்டு மனிதர்கள் எழும்பி, என்னை அழைத்து வந்து வெளியே விட்டனர்.) நான் படிக்கட்டுகளின் கீழே இறங்கிப் போக வேண்டு மென்று அவர் என்னிடம் கூறி விட்டு, “பில்லி, நான் உம்மிடம் கேட்கிறேன், நீர் யாருக்காகவும் ஜெபிக்க வேண்டாம், அவ்வாறு ஜெபிக்க வேண்டுமென்று நான் உம்மிடம் கேட்க மாட்டேன்” என்றார். ஆனால், "இங்கே எங்களிடம் விவாகமான அழகான வாலிப ஸ்திரீயாகிய ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியை இருக்கிறாள். அவள் ஏறத்தாழ முற்றிலுமாக போய் விட்டாள். அவள் நரம்புக் கோளாறைக் கொண்டிருக்கிறாள். நீர் உம்முடைய கரங்களை சற்று அவள் மேல் வைப்பீரானால், அது அவளைத் திருப்திபடுத்தி விடும் என்று நான் எண்ணுகிறேன். எல்லா இடங்களிலும் அவளுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டுள்ளது” என்றேன். நான், "சரி, சகோதரன் ஜான்சன்” என்றேன். நான் கீழிறங்கிச் சென்றேன். ஒரு வேதனையான தோற்றத் தோடு கூடிய ஒரு ஸ்திரீயை நான் காணப் போகிறேன் என்று நினைத்தேன், (ஆனால்) அழகாக காணப்பட்ட ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள்: ஏறக்குறைய முப்பது வயது மதிக்கத்தக்க ஆரோக்கியமான, அழகாக தோற்றமளிக்கிற ஒரு பெண்ணாக அவள் காணப்பட்டாள். அவள், "சகோதரன் பிரன்ஹாமே, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். நான், “நீ ஒரு நோயாளியா?” என்றேன். அவள், “ஆம்” என்றாள். நான், "நீ வேதனையான தோற்றத்தில் காணப்படுவதாக நான் எதிர்பார்த்தேன்” என்றேன். நான், "சகோதரியே, என்ன விஷயம்?" என்றேன். அவள், "சகோதரன் பிரன்ஹாமே, எனக்குத் தெரியவில்லை” என்றாள். நான், "உனக்கு இது எவ்வளவு காலமாக இருக்கிறது?" என்றேன். அவள், "ஏறக்குறைய எட்டு வருடங்களாக. நான் அப்படியே எல்லாவற்றையும் செய்து விட்டேன். நான் என்னுடைய சிந்தையை இழந்தவளாக இருக்கிறேன் என்பதை நான் - நான் அறிவேன்” என்றாள். நான், "உனக்கு அப்படியிருக்கிறது என்று நான் எண்ணவில்லை. நீ கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிறாயா?” என் றேன். அவள், "ஓ, ஆம், ஐயா. எனக்கு அருமையான வாலிப பிள்ளைகளையுடைய ஞாயிறு பள்ளி வகுப்பு இங்கே உள்ளது. பதினெட்டாவது தெரு மிஷனில், ஞாயிறு பிற்பகலிலும் மற்ற நேரங்களிலும் எனக்கு ஆராதனை உண்டு. பெருங்கூட்ட பிள்ளை களுக்கு நான் போதிக்கிறேன்" என்றாள். நான் அவளுக்காக ஜெபித்து விட்டு வெளியே போய் விட்டேன். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு, நான் அவளைத் தெருவில் சந்தித்தேன் (மனைவியும் நானும்). 45. எனவே நாங்கள் அவளைச் சந்தித்த போது, ஏன், அவள் ஃபெயர் ஸ்டோர் (Fair Store), அல்லது வெள்ளை மாளிகைக்குள் (White House) சென்றாள், அதுதான் என்று நம்புகிறேன். நான், "அந்த பெண் அங்கே இருக்கிறாள்” என்றேன். மேலும் நான் - நான், "நீ எப்படி உணருகிறாய்?” என்றேன். அவள் இரண்டு பெண்களுடன் இருந்தாள். அவள், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, ஏதாவது (சொல்ல வேண்டுமானால்), நான் மோசமாக இருக்கிறேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கு - எனக்குத் தெரியவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று நம்புகிறேன். நான் - நான் ” என்றாள். எனவே அவள் பயங்கரமான நிலையில் இருந்தாள். நான் ஒருபுறமாக விலகிச் சென்று என்னால் கூடுமான வரையில் பயபக்தியோடு அவளுக்காக ஜெபித்தேன். நான், "இப்பொழுது, விசுவாசத்தோடு போ" என்றேன். நாங்கள் போய் விட்டோம், நான் திரும்பி வருவதற்கு பல நாட்கள் ஆகிவிட்டது. அவள் அப்படியே தொடர்ந்து என்னுடைய மனைவி யுடன் தொலைப் பேசியில் பேசிக் கொண்டே இருந்தாள். அவள், "சகோதரன் பிரன்ஹாம் வேறொரு கூட்டத்தைக் கொண்டிருக்கும் போது, அவர் அந்த அபிஷேகத்தின் கீழ் இருக்கும் இடத்தில், இந்தக் கொடுமையை என்னை விட்டு நீக்கிப்போட ஏதோவொன்று இருக்க வேண்டும். ஏதோவொன்று அதைச் செய்ய வேண்டும். என்னால் சற்றும் முடியவில்லை. நான் தேசம் முழுவதும் உள்ள மனிதர்களிடம் ஜெபித்திருக்கிறேன். நான் அப்படியே... மருத்துவர்களால் எதுவும் செய்ய முடிய வில்லை ” என்றாள். அவள் லூயிவில்லிலுள்ள பிரபலமான மனநல மருத்துவர்களிடம் போய் வருடக்கணக்காக ஒவ்வொரு வாரமும் பத்து டாலர்கள் செலவு செய்து வந்தாள். எதுவுமே அவளுக்கு உதவி செய்ய முடியவில்லை . 46. எனவே ஒரு காலை வேளையில், இத்தரிசனம் இங்கே வந்த போது, அது ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் சம்பவிக்குமென்ற கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்ததென்று எழுதினேன், நான் அதை உங்களுக்குக் கொடுப்பேன், எனவே உங்களால் அதை எழுத முடியும். அவர் சொன்னபிரகாரமாக வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறுகிறதா என்று பாருங்கள். அந்த காலையில், நான் இருந்த அறையில் அவர் வந்தார். என்னுடைய மனைவி வெளியே வந்த போது, அவள், “பில், நான் முதலாவது அந்த ஸ்திரீயை அழைக்கட்டும், நீங்கள் வருவீர்களா? அவள் பரிதாபமாக அவ்வளவு இக்கட்டான ஒரு நிலையில் இருக்கி றாள்” என்றாள். நான், “மிகவும் நல்லது. நீ அவளை அழைக்கலாம்” என்றேன். எனவே அவள் அங்கே போவதற்கு முன்பு, அங்கே வேறு ஜனங்கள் இருந்தனர். லூயிவில்லிலுள்ள வால்நட் தெரு பாப்டிஸ்ட் சபையிலிருந்து, தன்னுடைய கல்லீரலில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் அங்கே இருந்தான். அவன்... அது மூன்று - இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது, மூன்று ஆண்டுகள் ஆகப்போகிறது. அவர் இப்பொழுது அங்கே என்னுடைய சபையில் - அந்த சிறு கூடாரத்தில் ஒரு அங்கத்தினராக இருக்கிறார். அவர் எல்லா நேரமும் வருகிறார். ஆகவே அவர் என்ன செய்திருந்தார் என்பதை கர்த்தர் அவரிடம் கூறினார். அவர் வழக்கமாக ஒரு பேஸ் பால் விளையாட்டு வீரராக இருந்தார், அவர் செய்திருந்த ஏதோவொன்றை சரி செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது. அவர் அதைச் செய்தார். அவர் பிழைத்துக் கொண்டார். 47. எனவே அந்த ஸ்திரீ உள்ளே வந்து, உட்கார்ந்தாள். நான் அவளை குகை அறைக்குள் அழைத்துச் சென்றேன். நான், “நம்மால் அது ஆகட்டும் என விரும்புகிறேன்” என்றேன். நாங்கள் உட்கார்ந்தோம்; நான் இங்கே மேடையில் செய்வது போன்று அவளிடம் சற்று பேச வேண்டியதாயிருந்தது. அவள் சொன்னாள்... நான், "சகோதரியே, என்ன விஷயம்?” என்றேன். அவள், "சகோதரன் பிரன்ஹாமே, எனக்குத் தெரியவில்லை . நான் அப்படியே.... எல்லாம் என்னை விட்டுப் போய் விட்டது போன்று காணப்படுகிறது, நான் பூமியில் நடந்து கொண்டிருப்பது போன்று உணருகிறேன், நான் அதை அசைக்க நேர்ந்தால், அது போகிறது... அது அந்தரத்தில் நின்று கொண்டிருக்கிறது என்று நான் அறிகிறேன். அது - அது மூழ்கடிக்கப்பட்டு விடும்” என்றாள். நான், "என்னே, உனக்கு அந்த பாரம் இருக்கக் கூடாது” என்றேன். எனவே அது அப்படியே அவ்விதமாகத்தான் இருந்தது. மேலும் அவள், "நல்லது, என்ன காரியம் என்று எனக்குத் தெரியவேயில்லை. நான் பித்துபிடித்தவள் என்று எனக்குத் தெரியும். உண்மையிலேயே நான் பித்துப் பிடித்தவள் தான் என்று நான் - நான் அறிவேன். அவர்கள் என்னை பயித்தியக்கார மருத்துவமனைக்கு அனுப்பப் போகின்றனர்" என்றாள். நீங்கள் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏதோவொன்று தவறாயுள்ளது என்பதை உங்களால் காண முடியும். எனவே நான், “நல்லது, நீயும் நானும் இதேப் போன்று பேசிக் கொண்டிருப்போம், உனக்குத் தெரியும், ஒரு வேதவாக்கியம் அல்லது ஏதோவொன்றில் இருப்பதைப் போன்று பேசிக் கொண்டிருப்போம்” என்றேன். அவள், “சரி” என்றாள். அவள் அப்படியே அவளுடைய கரங்களைப் பிசைந்து கொண்டிருந்தாள், அவளுடைய கையுறையை எடுத்துக் கொண்டு, அதை இவ்விதமாக சுருட்டிக் கொண்டிருந்தாள். நான், “இப்பொழுது, சகோதரியே, நான் அப்படியே உன்னுடைய கையுறைகளை கீழே வைத்து விடுகிறேன், அப்படியே - அப்படியே ஆசுவாசப்படுத்திக் கொள்” என்றேன். அவள், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, என்னால் முடியவில்லை. நான் செய்ய முடியும் என்று வாஞ்சிக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை” என்றாள். நான், “நீ... நீ ஒரு கிறிஸ்தவளா?” என்று கேட்டேன். "ஆம், எல்லாவற்றிலும்.” நான், "சகோதரன் ஜான்சனுடைய மிகவும் பிரபலமான அங்கத்தினர்களில் நீயும் ஒருவள் என்று அவர் என்னிடம் கூறி னார், மிகவும் விசுவாசமுள்ள அங்கத்தினள் என்று கூறினார்” என்றேன். மேலும் அவர்... அவள், "நல்லது, நான் அதற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் இருக்க முயற்சிக்கிறேன்” என்றாள். நான் தொடர்ந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். சரியாக எங்களுக்கு முன்பாக ஒரு கறுப்பு நிற கார் இங்கே வருவதைக் காண நேர்ந்தது. அது நிழலுக்குள் அசைந்து செல்வதை நான் கண்டேன். நான், “நீ எப்பொழுதாவது ஒரு கார் விபத்தில் சிக்கினாயா?" என்று கேட்டேன். அவள், "இல்லை , ஐயா. நான் ஒருபோதும் கார் விபத்தில் சிக்கவேயில்லை” என்றாள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) "காலன்.... அவர்கள் உன்னை நாள் முழுவதும் அபிஷேகிக்க முடியும். எல்லா ஜனங்களும் சுற்றிலும் நின்று கூச்சலிட்டு, கால்களை அழுத்தி நடந்து, உரக்கக் கூக்குரலிட்டு, உரக்கக் கத்தலாம்,” நான், “அந்த பிசாசு சரியாக அங்கேயே படுத்திருக்கும், எனெனில் அங்கே படுத்திருக்க அவனுக்கு சட்டப்படியான உரிமை உள்ளது. இப்பொழுது அங்கே தான் உன்னுடைய கோளாறு உள்ளது...." என்றேன். அவள்... நான் சொன்னேன்.... "நான் என்ன செய்ய வேண்டும்?" நான், "உன்னுடைய கணவனிடம் போய் சொல். அதை சரி செய்து விடு” என்றேன். அவள், "ஓ, நான்... சகோதரன் பிரன்ஹாமே, எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அது எங்களுடைய வீட்டை உடைத்துப்போடும்” என்றாள். நான், "இப்பொழுது, சகோதரியே, அவ்வளவு தான் எனக்குத் தெரியும். இப்பொழுது, உலகத்திலுள்ள எல்லா மனநல மருத்துவர்களும் அதை உன்னை விட்டு வெளியே கொண்டு வர முடியவில்லை. உனக்கும் அம்மனிதனுக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. கர்த்தர் அதை அறிந்தார். எனவே அவர் அதை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்றேன். அவள், “நல்லது, நான் - நான் அதை செய்யவே முடியாது. நான் அதைச் செய்ய முடியாது” என்றாள். நான், “நல்லது, இப்பொழுது...” என்றேன். நிச்சயமாக அது... பாருங்கள்? நான் வெளியே போகத் தொடங்கினேன். அவள், "இல்லை, இல்லை. சகோதரன் பிரன்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள். போகாதீர்கள். போகாதீர்கள். ஒரு நிமிடம் பொறுங்கள்” என்றாள். அவள் அழுது கொண்டிருந்தாள். பரிதாப மான அவளுக்காக நான் வருந்தினேன். ஆனால் அங்கே ஒன்றே ஒன்று.... யாரோ ஒருவருக்காக உள்ள இந்த வருந்துகிற உணர்வானது, அப்போது காரியம் என்னவென்றால், நீங்கள் ஜனங்களுடன் உத்தமமாக இருக்க வேண்டும். அதுதான் இன்றைக் குள்ள பிரச்சனை. நாம் மிகவும் அதிகமாக அற்பத்தனமான அநுதாபத்தைக் கொண்டிருக்கிறோம். அது சரியே. நீங்கள் சத்தியத்தைச் சொல்ல வேண்டும், தேவன் சத்தியத்தைக் கனப்படுத்துவார். 49. எனவே அவள் வெளியே போகத் தொடங்கினாள்.... இன்னும் சரியாக சொன்னால், நான் வெளியே போகத் தொடங்கினேன், அவள் என்னிடம் வந்தாள், நான் அந்த அறையில் நின்று கொண்டு அவளைப் பார்ப்பதற்காகத் திரும்பினேன், அவளுடைய வலது பக்கத்தில், அலை அலையான கறுத்த தலைமுடியையுடைய பக்கவாட்டில் தலைவாரியிருக்கும் ஒரு உயரமான மனிதர் நின்று கொண்டிருந்தார். நான், "உன்னுடைய கணவனார் அலையலையான கறுத்த தலைமுடியையுடைய உயரமான ஒரு மனிதரா?” என்று கேட்டேன். அவள், "ஆம், ஐயா” என்றாள். அப்போது எனக்கு தன்னுடைய முதுகுப்புறத்தைத் திருப்பினார். அவர் அவ்வாறு செய்த போது, அவரது பின்னால் செவர்லெட் (Chevrolet) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. நான், "அவர் ஒரு செவர்லெட் நிறுவனத்தில் வேலை செய்கிறாரா?” என்றேன். "ஆம்” என்றாள். "உமக்கு அவரைத் தெரியுமா?" என்று கேட்டாள். நான், “இல்லை, மேடம்” என்றேன். ஆனால் நான், “உன்னிடம் அறிக்கை செய்யும்படியாக அதே காரியத்தை அவரும் - அவரும் பெற்றிருக்கிறார். அவர் வேறொரு தேசத்தில் தரையிறங்கின போது, அவர் போயிருந்த இடத்தில், அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு ஸ்திரீயுடன் ஒரு பச்சை நிற செவர்லெட் காரில் உன்னுடைய கணவனார் இருந்து மூன்று நாள் கூட ஆகவில்லை ... அவள் கறுத்த தலைமுடியுடையவளும், இளஞ் சிவப்பு நிற ஆடையையும் அணிந்திருப்பாள், அவர் உனக்கு உண்மையற்றவராக ஜீவித்தார்” என்றேன். அவள், “என்னுடைய கணவரா?” என்றாள். நான், “ஆம்” என்றேன். அவள், "அவர் சபையில் ஒரு டீக்கனாக இருக்கிறார்” என்றாள். நான், "அவர் என்னவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை, சகோதரன் ஜான்சன் அங்கே கெட்ட நேரத்தை கொண் டிருப்பதில் வியப்பொன்றுமில்லை, அதைப்போன்று தான் உள்ளது” என்றேன். 50. இன்று பாதியளவு சபைகளில் உள்ள ஏதோவொரு காரியம் அதுவே தான். அவர்கள் அதை நேராக்குவார்களானால், நீங்கள் காரியங்களைப் பெற்றுக் கொள்வீர்கள்... நான், "இப்பொழுது, இங்கே எங்களிடம் நான்கு தொலைபேசிகள் உள்ளன. நீ உன்னுடைய கணவனாரை அழைத்து அதைச் சரிப்படுத்திக் கொள். அதன்பிறகு நாம் கர்த்தரிடம் பேசுவோம். ஆனால் அது அங்கே இருக்கும் காலம் வரை, எதையும் செய்யும்படி முயற்சி செய்ய வேண்டிய தேவையில்லை” என்றேன். 51. நான் வெளியே போகத் தொடங்கினேன், அவள்... மேடா அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் சென்று தன்னுடைய கணவனை அழைத்தாள். அங்கே.... அந்தப் பெண்மணி அவளுடன் அந்தக் காரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் சென்று சந்தித்தனர். ஒரு சில நிமிடங்களில், அவன் காரில் அவளுடன் சென்றான் (அவளை சாலையில் சந்தித்தான்). அவள் செய்யும்படியாக ஒரு அறிக்கை உள்ளது என்றாள். எனவே அவள் பக்கமாக உள்ள அதைக்குறித்த எல்லாவற்றையும் அவனிடம் கூறினாள். அவள், "நீர் என்னை மன்னிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றாள். அவன், "நான் மன்னிப்பேன்” என்றான். "இப்பொழுது, இரண்டு நாட்களுக்கு முன்பு நீர் இந்த... உடன் இருக்கவில்லையா?” என்றாள். அவளுக்கு அந்த ஸ்திரீயைத் தெரியும். அவன், "நல்லது, ஊ... நீ எங்கே இருந்தாய்?" என்றான். அவள்.... அவன் சொன்னான்.... அவள், “அது உண்மையா?” என்றாள். அவன், "அதை உன்னிடம் சொன்னது யார்?” என்றான். அவள், "சகோதரன் பிரன்ஹாம்” என்றாள். அவன், "தேனே, அது உண்மை . நீ என்னை மன்னிப்பாயானால், நானும் உன்னை மன்னிப்பேன். நாம் சபைக்குத் திரும்பிச் சென்று நம்மிருவரையும் மன்னிக்கும்படி தேவனிடம் கேட்போம். நாம் நிச்சயமாக கிறிஸ்தவர்களைப் போல ஜீவிப்போம். நாம் நம்முடைய பிள்ளைகளை சரியான வழியில் வளர்க்க வேண்டும்” என்றான். 52. என்னுடைய மனைவி, "அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றாள். நான், "ஆம்" என்றேன். ஜனங்கள் உள்ளே வந்தனர். சிறிது கழிந்து அவள் வந்தாள். அவள், "பில், இங்கே வாரும்” என்றாள். நான் கொஞ்சம் அதிகமான ஜனங்களுடன் அறையில் இருந்தேன். அவர்கள் தங்க ளுடைய கரங்களை ஒருவர் மேல் ஒருவர் போட்டுக் கொண்டு, தங்கள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தவர்களாய் அங்கே வந்தனர். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 53. ஓ, நித்திய தேவனே, சீனாய் மலையில் இடிகளை முழங்கி, கற்பனைகளை எழுதினவரும், கல்வாரியில் இடிகளை முழங்கி, "முடிந்தது” என்று முழங்கினவருமாகிய மகத்தான யேகோவாவே. தேவனுடைய வார்த்தையானது... என்ன முடிந்தது? "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமா தானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம்.” அது முடிந்து விட்டது. ஓ, இன்றிரவு நாங்கள் கல்வாரியை நோக்கிப்பார்க்கட்டும், அங்கே தான் அது முடிந்து விட்டது, நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளட்டும். நாங்கள் கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம், அது உம்முடைய அழைப்பாகவும் தெரிந்து கொள்ளுதலாகவும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுகிறோம். நீர் ஒருவனை அழைக்காமல், "யாருமே வர முடியாது,” என்று நீர் சொன்னீர்: "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வர மாட்டான்” என்று நீர் கூறினீர். 54. முற்காலத்தைய ஆபிரகாமைப் பார்க்கிறோம், அவன் மற்ற எந்த மனிதனைக் காட்டிலும் மேலானவனல்ல, அவன் கல்தேயா தேசத்து ஊர் பட்டணத்தை விட்டு, பாபிலோனை விட்டு, சிநேயார் பள்ளத்தாக்கிற்கு வந்தான், அவன் ஒருவேளை விக்கிரக ஆரா தனை செய்பவனாக இருந்திருக்கலாம், ஆனால் இராஜாதிபத்திய தெரிந்து கொள்ளுதலினால் தேவன் அவனைத் தெரிந்து கொண் டார். "ஆபிரகாமே, நான் உன்னையும் உனக்குப் பிறகு உன்னு டைய சந்ததியையும் இரட்சித்திருக்கிறேன்.” ஓ, தேவனே. பூமியின் தூளையும், கடற்கரை மணலையும், வானத்து நட்சத்திரங்களையும் எண்ணும்படியாக அதை பார் என்று அவனிடம் கூறினார். அது எண்ணமுடியாதவைகள். தூளிலிருந்து நட்சத்திரங் கள் மட்டுமாக அவனுடைய சந்ததி வரும். இன்றிரவு உம்முடைய பரிசுத்த ஆவியானவர்.... நாங்கள் ஆபிராகாமின் சந்ததியாயிருக்கும்படி, கிறிஸ்துவுக்குள் மரித்து, வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரவாளிகளாய் இருக்கிறோம். இன்றிரவு தெரிந்து கொள்ளுதலுடன் நான் உட்கார்ந்திருப்பதற்காக எவ்வளவாக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர்களுடைய சகோதரனாக என்னை அவர்கள் அழைக்கின்றனர். நாங்கள் உம்மை எங்களுடைய பிதாவாக அழைக்கிறோம். நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். 55. இப்பொழுது, உம்முடைய அன்பையும் பிரசன்னத்தையும் ஜனங்களுக்கு வெளிப்படுத்தும். நீர் இங்கே பூமியில் இருந்த போது, கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயிடம் பேசுகையில் அவளுடைய பாவத்தை நீர் அறிந்து கொண்டீர். நீதிமானாகிய நாத்தான்வேலிடம் நீர் பேசி, அவன் ஆராதனைக்கு வரும் முன்பே அவன் செய்திருந்ததை அவனிடம் கூறினீர். நீர் நேற்றும் இன்றும் என்னும் மாறாத இயேசுவாக இருக்கிறீர். நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து இப்பொழுதும் என்றென்றுமாக ஜீவிக்கிறீர். கர்த்தராகிய இயேசுவே, நீர் வந்து, இந்த அற்பமான உபயோகமற்ற ஊழியக்காரனை அபிஷேகித்து, இன்றிரவு உமக்குச் சித்தமான யாருக்காகிலும் உம்முடைய வார்த்தையை கொடுக்க ஒரு வாய்க்காலாக அதை உபயோகியும். இயேசுவின் நாமத்தில் நான் அதைக் கேட்கிறேன். ஆமென். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 56. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்று வேதவாக்கியம் கூறுகிறது: எபிரெயர் 13:8. அப்போது இயேசு கிறிஸ்து, "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்றார். அது சரியா? இப்பொழுது, அது... அது சுவிசேஷமாக இருந்தால், அது சத்தியமாக உள்ளது, அப்போது இயேசு கிறிஸ்து தம்மை வெளிப் படுத்துவார். அது சத்தியமாக இல்லையென்றால், அவர் கிறிஸ்து வாக இருக்கவில்லை , அது முழுவதும் தவறாக உள்ளது. அது சரியாகவோ அல்லது தவறாகவோ மாத்திரம் இருக்கும்படி நம்மால் செய்ய முடியும். அது இயேசுவாக இருந்தால், அவர் இங்கே பூமியிலே இருந்த போது, அவர் இங்கே பூமியிலே செய்த அதே கிரியைகள் திரும்பவும் செய்யப்பட வேண்டும் அல்லது அவர்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 57. நாத்தான்வேல் என்னும் பெயருடைய மிகவும் பிரபலமான யூதன் ஒருவன் அவரிடம் வந்தான். பிலிப்பு அவனைக் கண்டு அவன் மேசியாவைக் கண்டதாக அவனிடம் கூறின பிற்பாடு. அவன்.... "முட்டாள்தனம்." அவனால் அதை விசுவாசிக்க முடிய வில்லை . அவன், “நல்லது, அப்படியானால்....' என்றான். ஏன் அவனால் அதை விசுவாசிக்க முடியவில்லை? அவன் வந்து அவர் யாரென்று கண்ட போது..... இயேசு அவனிடம், “இதோ, கபடற்ற இஸ்ரவேலன்” என்றார். (வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு நேர்மையான, நேரான, பக்தியுள்ள மனிதன்.) அவன், "ரபி, (அல்லது எஜமானரே, போதகரே, மதிப்பிற் குரியவரே), ரபி, நீர் என்னை எப்போது அறிந்தீர்? நீர் எனக்கு அந்நியராயிருக்கிறீரே” என்றான். அவர், "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னமே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போதே” என்றார். அவன் மிகச் சீக்கிரமாக, “நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் இராஜா” என்றான். அவன் அடையாளம் கண்டு கொண்டான். அவனுடைய பெயரானது இன்றிரவும் அழியாததாக உள்ளது. 58. இன்று, அவன் ஒருவேளை, "மனதிலுள்ளவைகளைப் தொடர்பு கொள்ளுதல், அது ஒரு சூனிய வித்தை” என்று சொல் லியிருப்பான். அந்த நாட்களில் யூதர்கள் இயேசுவை அவ்வாறு அழைத்தனர், ஏனெனில் அவரால் அதைச் செய்ய முடிந்தது. அவர்கள் அவரை பெயல்செபூல் என்று கூறினர். யெபல்செபூல் என்பது குறிசொல்லுபவர்களின் தலைவன், எல்லா பிசாசுகளிலும் மோசமானவன். ஆனால் அவர் அவ்வாறு இருக்கவில்லை . அவர் கர்த்தராகிய இயேசுவாக இருந்தார், அவர் தீர்க்கதரிசியில் இருந்த அதே இயேசுவாகவும், அதே தேவனாகவும் இருந்தார். 59. இப்பொழுது, உங்களுக்கு விருப்பமானால், நாம் சற்று நேரம், "விசுவாசிப்பாய்” என்ற (பாடலைப் பாடுவோம்). ஒவ்வொரு வரும் ஒரே இசைவுடன் இருப்போம். சற்று நேரமாகி விட்டது. நான் வருந்துகிறேன், நான்... நீங்கள் அப்படிப்பட்ட ஒரு அருமை யான சபையாராய் இருக்கிறீர்கள். நான் தொடர்ந்து பேசிக்கொண் டிருக்கிறேன், நான் அதை செய்யக் கூடாது. ஏனெனில் அது.... இப்பொழுது, நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்... எத்தனை பேர் கடந்த இரவில் அந்தப் படத்தை பார்த்தீர்கள்... அது... எடுக்கப் பட்டிருக்கிறது.... வனாந்திரத்தில் இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பம் இப்பொழுது படமெடுக்கப்பட்டு, வாசிங்டன் டிசியில் தொங்கிக்கொண்டிருக்கிறது, அதே அக்கினி ஸ்தம்பம். அது என்ன? அது மாறாத தேவனாக இருக்கிறது. 60. அது இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனில் வெளிப்பட்டது. அது இன்று அவருடைய சபையில் வெளிப்பட்டுள்ளது, அதே தேவன் தான் (பாருங்கள்?), அதே அக்கினிஸ்தம்பம். மேலும் அவர் இங்கே இருக்கிறார், அந்தப் படத்தின் மூலமாக பழைய ஏற்பாட்டின் நிரூபணத்தை நாம் பெற்றுள்ளோம். நீங்கள் அதைக் காண்பீர்கள். இந்த விதமாக பாருங்கள். அது உலகத்தைச் சுற்றிலும் பல மில்லியன் ஜனங்க ளால் பார்க்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக, அது இப்பொழுது நான் நின்று கொண்டிருக்கிற இடத்திலிருந்து பத்து அடி தூரத்தில் கூட இல்லை . அப்படியானால் அது மேசியாவின் அடையாளமாக உள்ளது. இப்பொழுது, கர்த்தர் அருளுவாராக. நான் சற்று வரிசையைக் காண விரும்புகிறேன். நான் (இதுவரை) அறிந்துள்ளபடி, உதவி யாளர்களுடன் இங்கே நின்று கொண்டிருக்கும் என்னுடைய சொந்த மகனையும், இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சங்கை திரு. பிரிவரையும் தவிர எனக்குத் தெரிந்த ஒரு நபரும் இங்கில்லை, இதுவரையிலும் நான் காணக்கூடியது வரை, அது அவ்வாறு தானே? என்னுடைய நியாதிபதியாகிய தேவன் அதை அறிவார். எனக்குத் தெரிந்த வேறு யாரையும் நான் காணவில்லை. நீங்கள் எல்லாரும் எனக்கு அந்நியராயிருக்கிறீர்கள். 61. நான் இங்கேயிருக்கும் இந்த சிறு குழந்தையை நோக்கிப் பார்த்து, அதற்கு தலையில் ஏற்படும் நீர்ம வியாதி (water head) இருக்கிறது என்று கூறுவேனானால், நல்லது, அது மறை பொருளான காரியம் அல்ல. நீங்கள், "நிச்சயமாக, நான் அதைக் காண முடிகிறது” என்று கூறியிருப்பீர்கள். ஆனால் ஆரோக்கியமானவராக தோற்றமளிக்கும் நபர், அது தான் அந்த நபராக இருக்கிறார். இப்பொழுது, ஜெப அட்டைகளைக் கொண்டிருக் காமல் சுகமடைய விரும்பும் எத்தனை பேர் அங்கே வெளியே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களைப் பார்க்கலாம், எவ் விடத்திலும்..... விரும்புகிறவர்கள், எல்லா இடத்திலும் இருந்து உங்களுடைய கரங்களை மேலே உயர்த்துங்கள். எனவே நான்... இப்பொழுது, நான் உங்களிடம் கேட்கப் போகிறேன்... இப்பொழுது, உங்களில் 90 சதவீதம் பேர் ஜெப அட்டைகளைப் பெற்றிருக்க வில்லை, ஏனெனில் குறிப்பிட்ட அளவு ஜெப அட்டைகள் மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் நம்மால் இனிமேலும் கொண்டு வர முடியாது. ஆனால் நண்பர்களே, கவனியுங்கள், நீங்கள் இந்த வழியாக நோக்கிப்பார்த்து, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், வெறுமனே விசுவாசம் கொண்டிருங்கள். தேவன் இயேசு கிறிஸ்துவில் செய்தது போல, சபையோரிடம் திரும்பி, அதே காரியத்தை சொல்லுகிறாரா என்று பாருங்கள். இயேசு அங்கேயிருந்த அவர்களுடைய சிந்தனைகளை உணர்ந்து, அவர்களிடம் என்ன தவறு இருந்தது என்றும் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களிடம் கூறினார். இன்றிரவும் அதே காரியம் தான்; அதுதான் கர்த்தராகிய இயேசு. 62. இப்பொழுது, அவருடைய பிரசன்னம் இங்கே உள்ளது..... இப்பொழுது, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இக்கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு ஆவியையும் சட்டப்படியாக என் அதிகாரத்தின் கீழ் எடுத்துக் கொள்கிறேன். (இப்பொழுது, வழிநடத்துபவர்கள்...) இப்பொழுது, நீங்கள் பயபக்தியாக இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் இப்பொழுது, கர்த்தர் என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பார்க்கும்படியாக, நான் - நான் இந்த மனிதரிடம் சிறிது நேரம் பேச வேண்டியுள்ளது. இப்பொழுது, இயேசு, அவர் வந்திருக்கும் போது... அவர் எரிகோவுக்குப் போவதற்கு முன்பாக அவர் சமாரியாவுக்குப் போக வேண்டியிருந்தது. அதுதான் அந்த பாதையில் உள்ள வழியாயுள் ளது. ஆனால் பிதா அவரை அங்கு அனுப்பினார். அவரில் இருந்த ஆவியானவர் அங்கே அவரை அனுப்பினார். அப்பத்தையும் இறைச்சியுைம் வாங்கி வரும்படி அவர் சீஷர்களை அனுப்பினார். ஒரு சமாரிய ஸ்திரீ கொஞ்சம் தண்ணீர் மொள்ளும்படி வெளியே வந்தாள். அவர், "தாகத்துக்குத்தா” என்றார். அவள், "... யூதர்களாகிய நீங்கள் சமாரிய தேசத்தாளாகிய என்னிடத்தில் கேட்பது வழக்கமில்லையே, ஏனெனில் அவர்கள் எந்த கொடுக்கல் வாங்கல் விவகாரங்களிலும் ஈடுபடுவதில் லையே” என்றாள். அவர், "ஆனால் நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என் பதை அறிந்திருந்தாயானால், நீ குடிப்பதற்காக என்னிடம் கேட் டிருப்பாய். நீ இங்கே மொண்டு கொள்ள வராதிருக்கும்படியாக நான் உனக்குத் தண்ணீரைக் கொடுத்திருப்பேன்” என்றார். நல்லது, அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. "தண்ணீர் மொள்ள உம்மிடம் எதுவுமில்லையே” என்றாள். எனவே அவர் ஒரு சில நிமிடங்கள் அவளிடம் பேசினார். அதன் பிறகு அவர் சொன்னார்..... சரியாக அவளுடைய பிரச்சனைக்கு நேராகச் சென்றார், "போய், உன்னுடைய புருஷனை அழைத்து வா” என்றார். அவள், “எனக்குப் புருஷனில்லை ” என்றாள். அவர், "அது சரியே. உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள்” என்றார். அவள், "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். அவள் பட்டணத்திற்குள் ஓடி, "நான் செய்த எல்லா வற்றையும் என்னிடம் கூறின ஒரு மனிதனை வந்து பாருங்கள்” என்றாள். அவர் - அவள் செய்திருந்த எல்லாவற்றையும் அவளி டம் அவர் ஒருபோதும் கூறவில்லை , ஆனால் அவளுடைய பிரச்சனை எங்கே இருந்தது என்று அவளிடம் கூறினார். அவர் அதைச் செய்யக் கூடுமானால், தேவன் அவருக்கு எல்லா காரியத்தையும் காண்பிக்க முடியும். 63. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். அந்த வாலிப மனிதரை நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாய். நான் சரியாக உனக்கு அந்நியனாயிருக்கிறேன். எனக்கு உன்னைத் தெரியாது. நான் என்னுடைய ஜீவியத்தில் உன்னை ஒருபோதும் கண்டதேயில்லை, உன்னைக் குறித்து எதையும் அறிந்திருக்கவேயில்லை. ஆனால் தேவன் உன்னை அறிவார், அவர் என்னையும் அறிவார். அவர் நம்மிருவரையும் அமர்த்தியுள்ளார். அவர் நம்முடைய ஜீவனை நமக்குத் தந்துள்ளார். நாம் எப்பொழுது நன்மையானவைகளைப் பெற்றாலும், அவை ஒவ்வொன்றும் தேவனிடமிருந்து வருகிறது. நீ அதை விசுவாசிக்கிறாயா? அப்படியானால் ஏதோவொன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறாய். அங்கே.... உன்னைச் சுற்றிலும் இருப்பது. ஏனெனில் அது என்னிடமிருந்து உன்னைச் சற்றி வருகிறது என்பதை என்னால் காண முடிகிறது. நீ ஒரு விசுவாசியாகவும், ஒரு கிறிஸ்தவ மனிதனாகவும் இருக்கிறாய். இப்பொழுது, அது அப்படியே நாத்தான்வேலிடம் இயேசு சொன்னது தானே? 64. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.).... அதே வித மாகவே அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நீ ஒரு கிறிஸ்தவன். நாம் சகோதரர்களாக இருக்கிறோம், இரத்த சமபந்தமான உறவையுடைய ஆவிகளாய் இருக்கிறோம். நீ ஒரு மனிதன், நான் வேறொரு மனிதன். நாம் இருவருமே தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். அங்கே ஏதோவொன்று தவறாக இருக்க லாம், நீ அதைக் குறித்து ஏதாவது அறிந்திருக்கலாம். தேவன் உன்னை நேசிக்கிறார். அவர் என்னை அனுப்பினார், நான் அவருடைய ஞானதிருஷ்டிக்காரனாக இருந்து, உன்னுடைய பிரச்சனை எங்கே இருக்கிறது என்றும் என்ன செய்ய வேண்டும் என்றும் அறிந்திருந்தால், அவர் என் மூலமாக பேச முடியும். அவர் எனக்குக் காட்டாமல் இருக்கலாம்; எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது நாம் இருவருமே அபிஷேகம் பெற்றிருக்கிறோம் என்பதை நான்- நான் அறிவேன். மேலும் இப்பொழுது, அதே கர்த்தருடைய தூதனானவர், அந்த அக்கினி ஸ்தம்பம் நம் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். உன்னுடைய கோளாறு உன்னுடைய கண்களில் உள்ளது. அது உண்மையா? உன்னுடைய கண்கள் பிரகாசமாகவும் அருமை யாகவும் காணப்பட்டாலும், அவைகள் அப்படியிருக்கவில்லை. அவைகள் பெலவீனமடைந்து, மங்கிக் கொண்டே போகின்றன. (உன்னுடைய கண்களிலுள்ள) நரம்புகள் மரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நரம்புக் கோளாறு அது உண்டாக காரணமாகியது. நான் காண்கிற வேறொரு காரியம் என்னவெனில், உனக்கு - உனக்கு ஒரு விபத்து நடந்துள்ளது. அந்த விபத்தானது ஒரு பக்கம் அல்லது ஏதோவொன்றை முடமாக்கியிருக்கிறது, அது சரியல்லவா? இன்னும் அது சுகமாகவில்லை. உனக்கு அதனோடு பிரச்சனை உள்ளது. அது உண்மையா? நீ.... அது உண்மை யானால்.... இப்பொழுது, சொல்லப்பட்டதை நீ கேட்டிருக்கிறாய், ஆனால் அது நானல்ல. அது என்னுடைய சத்தம் தான், ஆனால் அதை உபயோகப்படுத்துவது அவர்தான். அதன் ஒவ்வொரு சிறு காரியமும் சத்தியமாக உள்ளது. ஆம்...?... இங்கே வா. எங்களுடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பி, அவருடைய மகிமையை எங்கள் எல்லாருக்கும் வெளிப்படச் செய்த இரக்கமுள்ள பிதாவே, நாங்கள் இங்கே காலத்தின் முடிவிலும், இந்த மகத்தான யுகம் அடைக்கப்படும் காலத்திலும் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்... அணுகுண்டானது எந்த சமயத்திலும் வெடித்து, முழு உலகத்தையும் சர்வ சங்காரம் செய்ய ஆயத்தாயிருக்கிறது. கர்த்தாவே, நீர் விசுவாசிகளிடத்தில் உமக்கு இருக்கும் அன்புக்கு அடையாளமாக, அவர்களை நீர் (ஆயத்தம்) பண்ணி, வியாதியஸ்தர்களை சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். மேலும் இப்பொழுது, என்னுடைய சகோதரன் மேல் என்னு டைய கரங்களை வைத்து, அவருடைய விடுதலைக்காக கேட்கிறேன். தேவனுடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. களிகூர்ந்தவாறே சென்று சந்தோஷமாயிரு... சரி.... 65. இப்பொழுது, பயபக்தியாயிருங்கள். விசுவாசம் கொண் டிருங்கள். விசுவாசியுங்கள். அங்கே வெளியே இருக்கும் நீங்கள் ஜெபித்தவாறு அப்படியே விசுவாசம் கொண்டிருங்கள். சரி, ஐயா. நீர் ஒரு நோயாளியா? நீர் ஒரு வியாதியஸ்தராக இருக்கிறீர். நீரும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்று ஊகிக்கிறேன். எனக்கு உம்மைத் தெரியாது. உம்மை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. தேவன் உம்மை அறிவார். 66. உமக்காகத்தான் சற்று முன்பு ஜெபிக்கப்பட்டதா, ஐயா? நீர் என்னை நோக்கிப்பார்க்க வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். எலியா ஆகாபிடம் சொன்னதைப் போன்று நான் பொருள் கொள்கிறேன், அவன், "நான் யோசபாத்தின் மேல் மரியாதை கொண்டிருக்காவிட்டால், நான் உன்னைப் பார்க்க கூட மாட்டேன்" என்றான். ஆனால் அவன் அதை செய்தான். நாம் அந்நியர்களாயிருந்தால், நமக்கிடையே எந்த தொடர்புமே இல்லை, தேவன் அந்த தொடர்பை செய்ய வேண்டியவராய் இருக்கிறார், அவர் அவ்வாறு செய்ய மாட்டாரா? நான் உம்மைக் குறித்த ஏதோவொன்றை அறியும்படி தேவன் அனுமதித்து, அது உமக்கு உதவியாய் இருக்குமானால், நீர் இயேசுவை உம்முடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்வீரா? அல்லது அது.... சுகமாகுதல் தான் உமக்குத் தேவையாயுள்ளதாயிருந்தால். அது தான் உமக்குத் தேவையாயுள்ளது. உமக்கு சுகம் தேவையாயுள்ளது, ஏனெனில் அது உம்மைத் தொந்தரவு பண்ணிக் கொண்டிருக்கும் வயிற்றுக் கோளாறு ஆகும். அது சரியல்லவா? அது சரியானால், உம்முடைய கரத்தை உயர்த்தும். அது ஒரு வயிற்று... அது ஒரு நரம்பு பாதிப்பினால் உண்டானது. அது அல்சரையும், வயிற்றில் ஜீரண பாதிப்பையும் (peptic condition) உண்டாக்கியது. உமக்கு அந்த கோளாறு உள்ளது. நீர்... நீர் இந்தப் பட்டணத்திலிருந்து வரவில்லை . நீர் - நீர் இங்கே வாகனம் ஓட்டி இருக்கிறீர். நீர் நெடுந்தூரத்திலிருந்து சரியாக நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறீர். நான் அதைக் காண்கிறேன்... அது 50 மைல்கள் மற்றும் 100 மைல்களுக்கு இடைப்பட்ட தூரமாக இருக்கும் என்று கூறுகிறேன். அதைப் போன்ற ஏதோவொன்று. நீர் வந்திருக்கிறீர். நீர் - நீர்.... உம்மைக் குறித்து ஏதோ விநோதமான காரியம் உள்ளது. ஒரு நிமிடம். அது ஒரு... உமக்கு ஒரு நண்பருண்டு, அவருக்கு இருதயக் கோளாறு உள்ளது. மேலும் அது - அது..... அம்மனிதன் ஒரு யூதன் என்று நம்புகிறேன். அவன் - அவன் ஒரு... இயேசு வைக் குறித்து தெரியாது. அவன் ஒரு கிறிஸ்தவனாக ஆகியிருக்கவில்லை, இன்னும் கூட அவர் வாஞ்சித்துக் கொண்டிருக்கிறார்... அந்த மனிதர் இங்கே இக்கட்டிடத்தில் இருக்கிறார். அவர் சரியாக இங்கே உட்கார்ந்திருக்கிறார், சரியாக இங்கே ஒரு சீமாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். என்னுடைய நண்பனே, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய மேசியாவாகிய இயேசுவை இப்பொழுது உன்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள், உன்னுடைய இருதயக் கோளாறு உன்னை விட்டுப் போய் விடும். உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கைகூடும். உம்முடைய வயிற்றுக் கோளாறு உம்மை விட்டுப் போய் விட்டது. இப்பொழுது நீர் வீட்டிற்குச் சென்று நீர் விரும்புகிற எதையும் புசியும். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய யூத நண்பனே, இதுவே உன்னுடைய தருணம். பிலிப்புவை அறிந்து கொண்ட தேவனுடைய மேசியா உன்னையும் உன்னுடைய நண்பனையும் அறிந்துள்ளார். இதுதான் உன்னுடைய தீர்மானத்தின் வேளையாயுள்ளது. 67. நீ உன்னுடைய முழு இருயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு புற்று நோயும் பித்தப்பை கோளாறும் உள்ளது. அந்த புற்று நோயைக் குறித்தும், அது என்னவாக இருக்குமோவென்றும் நீ மிகவும் பயமடைந்துள்ளாய். நீ தேவ குமாரனையும், அவருடைய ஆவி உன்னை சுகமாக்க இங்கே உள்ளது என்றும் விசுவா சிக்கிறாயா? பேசுவது அவர்தான் என்றும் நானல்ல என்றும் நீர் விசுவாசிக்கிறீர். ஆனால் அவர் இங்கே இதன் வழியாக பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய சத்தமானது என் வழியாக பேசிக்கொண்டிருக்குமானால், அவருடைய பிரசன்னம் இங்கே உள்ளது. அவர், "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமடைவார்கள்” என்றார். நீ அதை விசுவாசிக்கிறாயா? அருகில் வா. ஓ தேவனே, வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக சகலத்தையும் சிருஷ்டித்தீர். மரித்துக் கொண்டிருக்கிற இந்த ஸ்திரீயின் மேல் நான் கரங்களை வைத்து நீர் அவளுக்கு ஜீவனைக் கொடுக்க வேண்டுமென்று கேட்கிறேன். கர்த்தாவே, அதை அருளும், இப்பொழுதே சத்துருவின் வல்லமை அவளை விட்டுப் போவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை கடிந்து கொள்கிறேன், அது வெளியே போவதாக........ என்னுடைய சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது களிகூர்ந்தவாறே போய் சந்தோஷமாயிரு. அப்படியே மிகவும் களிகூர்ந்து கொண்டும், கர்த்தருடைய நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்திக் கொண்டும் இரு. 68. சீமாட்டியே, நீ வரலாம். நம்முடைய எஜமானர் என்னைப் போன்று இங்கே மேடையில் மாம்ச சரீரத்தில், அவர் எனக்கு கொடுத்த இந்த கால்சட்டையை அணிந்து கொண்டு, நின்று கொண்டிருந்து, நீ சுகமளித்தலை எதிர்பார்த்துக் கொண்டிருப் பாயானால், அவர் உன்னை கல்வாரியில் அவருடைய பலிக்கு நேராக சுட்டிக்காட்டுவார். அவர் அதை இரண்டாவது தடவையாக செய்ய முடியாது; அவர் ஏற்கனவே அதைச் செய்து விட்டார். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதன்பிறகு, உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ளதை உணர்ந்து கொள்ளு வாய், நீ ஒரு கிறிஸ்தவளாகவும், ஒரு விசுவாசியாகவும் இருப்ப தாக அறிந்தால், நீ என்னுடைய சகோதரி என்று என்னால் கூற இயலும். அதன்பிறகு நம்முடைய பரலோகப் பிதா தம்முடைய அன்புள்ள தயையினால், சபையில் காரியங்களை வெளிப்படுத்த வேதாகமத்தைப் பிரசங்கிக்கும்படி பிரசங்கிமார்களையும், அதைப் போதிக்க போதகர்களையும், தேவனுடைய முன்னறிவை அறிந்து கொள்ள தீர்க்கதரிசிகளையும், அந்நிய பாஷையில் பேசும் வரங்களையும், பாஷைக்கு அர்த்தம் உரைத்தலையும் சபைக்கு அனுப்பியுள்ளார். அவர் அன்பு நிறைந்தவர். அப்படியானால், தேவனுடைய கிருபையினால், அவருடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் தேவனுடைய அன்பை உங்களுக்குக் கடந்து வர வல்லமையுள்ளவனாய் இருப்பேனாக. நீங்கள் நிச்சயமாக தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்க வேண்டும். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இதற்கு முன்பு ஒருவிசை சுகமடைந்துள்ளீர்கள். நீங்கள் வயிற்று புற்று நோயிலிருந்து சுகமடைந்துள்ளீர்கள். அது சரியா? நீங்கள் கீல்வாதத்திலிருந்தும், சில காரியங்களிலிருந்தும், மற்றவைகளிலிருந்தும் சுகமடைந்திருக்கிறீர்கள். அது சரியல்லவா? 69. நீங்கள் தாமே வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறீர்கள். ஆம், ஐயா . நீங்கள் சுற்றிலும் போய் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதன்பின்பு உங்களுக்கு ஏதோ ஒருவகையான சளி போன்றதொன்று படிப்படியாக உண்டாயிருக் கிறது, அது - அது உங்களைத் தொந்தரவுபடுத்தியிருக்கிறது. நீங்கள் எக்ஸ்-ரே எடுத்திருக்கிறீர்கள். நுரையீரல்களில் ஒரு தோல்கட்டி இருந்ததாக அது காட்டியது. அப்படியானால், தேவ னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்த கட்டியை நான் கடிந்து கொள்கிறேன், அது உங்களை விட்டுப் போகிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடைவீர்களாக. அவளுடைய ஜீவனை எடுக்கப்போகும் அந்தப் பிசாசை நான் கடிந்து கொள்கிறேன். நீங்கள் கவலைப்பட்டுக் கொண் டிருக்கும் காரியம் என்னவெனில் அந்த இருளைக் குறித்து தான். பாருங்கள்?...... அந்த இருள் உங்களை விட்டு போய் விட்டது. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு களிகூர்ந்தவர்களாகவும், சந்தோஷ முள்ளவர்களாகவும் போங்கள். உன்னால் விசுவாசிக்கக் கூடுமா? உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கைகூடும். 70. எப்படி இருக்கிறீர்கள்? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் களாய் இருக்கிறோம் என்று ஊகிக்கிறேன். நாம் ஒருவருக் கொருவர் அறிந்திருக்கவில்லை. தேவன் மாத்திரமே நம்மை அறிந்துள்ளார். ஆனால், என்னால் உன்னை சுகமாக்க முடியாது. ஆனால் உன்னுடைய ஜீவியமானது அல்லது... மறைக்கப்பட முடி யாது. தேவன் இங்கே நின்று கொண்டிருக்கிறார். அவரால் வெளிப்படுத்த முடியும். உனக்கு கீல்வாதம் உண்டு. நீ சில சமயங்களில் வீட்டின் வழியாக நகர்ந்து செல்ல முயற்சிப்பதை நான் காண்கிறேன், அது உனக்கு கடினமாக உள்ளது. மேலும் நீ.... நான் காண்கிறேன் ஒரு... நீ ஒரு இடத்திற்குள் போய்க்கொண்டிருக்கிறாய். அது - அது ஒரு மருத்துவமனை அல்லது ஏதோவொன்றாக உள்ளது. அது - அது ஒரு அறுவை சிகிச்சை. அது அந்த பக்கத்தில். அவர்கள் - அவர்கள் - அவர்கள் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு - ஒரு புற்று நோயை எடுத்துள்ளனர். நான் உன்னைக் காண்கிறேன்... ஒரு புற்று நோய். அந்த மருத்துவர் வைத்திருக்கிற ஒரு சிறு பட்டியலில் அது எழுதப்பட்டதைக் காண்கிறேன். அவர் ஒருவிதமான குட்டையான மனிதர். அவர் அந்த பட்டியலில் புற்று நோய் என்று எழுதினார். இன்னும் அது - அது சுகமடையவில்லை . அது சரியல்லவா? உனக்கு அதன் காரணமாக இன்னும் தொல்லை உள்ளது. ஆனால் அதைச் சுகப்படுத்த இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா? இங்கே வா. இரக்க முள்ள பரலோகப் பிதாவே, உம்முடைய இரக்கம் எங்களுடைய சகோதரியிடம் வருவதாக. இப்பொழுது, அந்த சத்துருவை இயேசு வின் நாமத்தில் கடிந்து கொள்ளுகிறோம், அது போய் சுகமடைவதாக. ஆமென். என்னுடைய சகோதரியே, (தேவன்) உன்னை ஆசீர்வதிப் பாராக. அவரிடம் சொல்... 71. நீ எப்படியிருக்கிறாய்? இப்பொழுது, நீ, "கரங்களை வைக்கிறீர்களே" என்று கூறலாம். ஆம். அதைத்தான் கர்த்தர் சொன்னார். "ஏன் கரங்களை வைக்கிறீர்கள்?" அதைத்தான் அவர் கட்டளையிட்டுள்ளார். ஓ, சபையானது மிகவும் குறைவு படுகிறதாய் இருப்பதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நீ புரிந்து கொள்ளவில்லை... நான் அப்படியே சிறிது நேரம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். தரிசனங்கள் என்னை பெல வீனப்படுத்துகிறது. நீங்கள் இரண்டு உலகங்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், அதன்பிறகு வேறொரு உலகத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களால் அதிலிருந்து விலகி இருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய கண்களைத் திறந்து கொண்டு ஒரு சொப்பனம் காண்பதைப் போல். தேவன் இராஜாதிபத்திய கிருபையில் அதை செய்கிறார். நீங்கள் அதைக் கேட்பதன் காரணத்தால் அல்ல. நீங்கள் அதற்காக வேண்டுதல் செய்ய முடியாது. தேவன் தாமே அதைச் செய்கிறார். நீங்கள் பிறப்பதற்கு முன்பே. இது தேவனால் ஒழுங்கில் வைக்கப்பட்டுள்ளது. அது உங்களுடைய உள்மனம் விஞ்ஞானப் பூர்வமாக பேசுதலாகும். நீங்கள் ஒரு சொப்பனம் காண்பது போல். இந்த மனச்சாட்சி (conscience) செயலிழந்து, இந்த ஒன்று செயல்படுவதாகும். அதன்பிறகு நீங்கள் தூக்கத்தை விட்டு விழிக்கும் போது.... நீங்கள் தூங்கும் போது, நீங்கள் காரியங் களைச் சொப்பனமாக காண்கிறீர்கள், நீங்கள் இங்கே அதை செய்கிறீர்கள். பிறகு, நீங்கள் விழிக்கும்போது, இந்த ஒன்று செயலிழந்து, இங்கே இருக்கும் இந்த ஒன்று செயல்படுகிறது. அப்போது, நீங்கள் பல வருடங்களுக்கு முன்பு சொப்பனத்தில் கண்ட காரியங்களையும் நினைவுகூருகிறீர்கள். நீங்கள் எங் கேயோ உள்ள உங்களுடைய ஏதோவொரு பாகமாக இருந்தீர்கள். சில ஜனங்கள் சொப்பனம் காண்பதில்லை. அவர்களுடைய உள்மனமானது வழியின் பின்னாலுள்ளது. சொப்பனம் காண்கிற ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதில்லை. அப்போது, அவரால் அதை விட்டு விலகி இருக்க முடியாது? ஏனெனில் அவர் சொப்பனம் காண்கிறார். ஒரு ஞானதிருஷ்டிக்காரனுடைய உள் மனமானது அங்கே பின்னாலோ அல்லது இங்கேயோ இருப்பதில்லை. அது சரியாக இங்கேயே உள்ளது. அவன் உறங்கச் செல்ல வேண்டியதில்லை. அவன் ஒரு உலகத்திலிருந்து வேறொரு உலகத்திற்கும், இயற்கையிலிருந்து இயற்கைக்கு மேம்பட்டவைகளுக்கும் உடைத்துக் கொண்டு போகிறான். மகத்தான தீர்க்கதரிசியாகிய தானியேல் ஒரு தரிசனம் கண்டான், அது அநேக நாட்களாக அவனுடைய தலையை தொல்லைப்படுத்தியது. அது பெலவீனப்படுத்தியது. 72. நீ விசுவாசிக்கிறாயா? உன்னுடைய பிரச்சனை எங்கே உள்ளது என்று தேவன் என்னிடம் வெளிப்படுத்துவாரானால், அது உனக்கு திருப்தியளிக்குமா? உனக்கு ஆஸ்துமா உள்ளது. அது சரியா? இப்பொழுது, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் போய் சுகமாயிரு. 73. சீமாட்டியே, வாருங்கள். எனவே நாம்...... இப்பொழுது, நீங்கள் மாத்திரம் விசுவாசித்து, விசுவாசம் கொண்டிருந்து, சந்தேகிக்காமல் இருந்தால். சீமாட்டியே, அப்படியே ஒரு நிமிடம். உனக்காக சிறிது முன்பு ஜெபிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு, இங்கே நின்று கொண்டிருந்து, சுகமடைந்தது நீங்கள் தானே? நீங்கள் சுகம் டைந்து விட்டீர்களா? சற்று முன்பு இங்கேயிருந்து ஜெபிக்கப்பட்ட சீமாட்டி நீங்கள் தானே? ஆம், ஐயா. அந்த அக்கினிஸ்தம்பம் அங்கே தொங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன், நான் அப்படியே.... இல்லை, அது வேறு யாரோ ஒருவர் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது வேறொரு சீமாட்டி. அவள் கண்ணாடி அணிந்துள்ளாள். அந்த ஸ்திரீக்கு தோல் வியாதி உள்ளது. இரக்கமாயிரும். தேவன் உன்னை ஆசீர்வதித்து, இப்பொழுதே உன்னை சுகமாக்குவார். உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசி, உன்னால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். 74. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சீமாட்டியே, நீ விசுவாசிக்கிறாயா? மேலும் உனக்கு நீரிழிவு வியாதி உள்ளது. எனவே அப்படியே தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிரு. தேவன் உன்னை சுகமாக்குவார். புண்ணாகியுள்ள கல்லீரலால் பாதிக்கப் பட்டுள்ள உன்னுடைய நண்பரை நீ அணைத்துக் கொண்டிருக் கிறாய். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கி, நீ குணமடைவாய் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிப்பாயானால்.... அந்த வயிற்றுக் கோளாறைக் கொண்டு அங்கே நின்று கொண்டிருக்கும் உன்னைப் போல. நீ... நீ மேலே வந்த போது, அது உனக்கு இருந்தது? ஆனால் இப்பொழுது அது உனக்கு இல்லை. எனவே நீ வெளியே தொடர்ந்து சென்று சுகடமைந்தவளாய் இருக்க முடியும். 75. வெறுமனே விசுவாசம் கொண்டிருங்கள். நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் கேட்பதெல்லாம் விசுவாசிக்க வேண்டும் என்பது தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறாரென்றும் விடாமுயற்சியுடன் தம்மைத் தேடுகிறவர்களுக்கு அவர் பலனளிக் கிறவர் என்றும் சற்று விசுவாசியுங்கள். அந்தக் கீல்வாதத்திலிருந்து நீ சுகமடைய விரும்புகிறாயா? உன்னுடைய சுகத்தை ஏற்றுக்கொள். "நான் தேவனை என்னு டைய முழு இருயத்தோடும் விசுவாசிக்கிறேன்" என்று கூறு. இப்பொழுது, நீ போய், அது உனக்கு உள்ளது என்று இனி ஒருபோதும் கூறாதே. அது உன்னை விட்டுப் போகிறது. விசுவாசம் கொண்டிரு. சீமாட்டியே, ஒரு நிமிடம். அங்கே சிறிது முன்பு ஏதோ வொன்று சம்பவித்தது. ஓ, ஆஸ்துமா வியாதியைக் கொண்டவராய் அங்கே அந்த மனிதர் உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். ஐயா, இயேசு உம்மை சுகமாக்கப் போகிறார் என்று நீர் விசு வாசிக்கிறீரா? அப்படியானால், உம் காலூன்றி நின்று உம்முடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளும். இருமுவதை நிறுத்தும். தேவ குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நான் அதைக் கடிந்து கொள்ளுகிறேன். நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் கேட்பதெல்லாம் விசுவாசத்தை மாத்திரம் கொண்டிருக்க வேண்டும் என்பதே. 76. உமக்கு சர்க்கரை வியாதி உள்ளது, இல்லையா? நீர் அதிலிருந்து சுகமடைய விரும்புகிறீரா? நீர் இயேசுவை உம்மு டைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்வீரா? அப்படியானால் போகலாம், இன்சுலின் நாட்கள் உமக்கு முடிந்து விட்டன. கர்த்த ராகிய இயேசுவின் நாமத்தில், நீர் அதைப் பெற்றுக் கொள்வீராக. தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். சந்தேகப்படாதீர்கள். 77. ஓ, தேவன் உன்னிடம் எப்படியாக அசைவாடிக் கொண் டிருக்கிறார். நீ அதிகமாக பதற்றமடைந்துள்ளாய், இல்லையா? நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா? ஆம், ஜயா. உனக்கு இருதயக் கோளாறு உள்ளது என்று அவர்கள் சிலநேரங்களில் எண்ணுகின்றனர், இல்லையா? நரம்பு சம்பந்த மான பாதிப்பு, ஒருவகையான அதிர்ச்சி... ஒரு... ஆம். மருத்துவர் உன்னுடைய இருதயக் கோளாறைக் குறித்து கூறின போது, அது உன்னை அதிர்ச்சியடையச் செய்ததைக் கண்டேன். இப்பொழுது இயேசுவை உன்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்வாயானால், நெடுங்காலமாக அதைத்தான் நீ வாஞ்சித்துக் கொண்டிருக்கிறாய்... நீ ஒரு பாவியாக இருக்கிறாய், உன்னுடைய இரட்சகராக இயேசு கிறிஸ்து அவசியமாயுள்ளது. இப்பொழுதே அவரை உன்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்வாயா? சகோதரனே, போ, நீ சுகமானாய், உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தருடைய தூதனானவர் சுகமாக்கும்படியாக அருகாமை யில் இருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? வாருங்கள். அந்த பரிதாபமான வயதான தாயார் நரம்புத்தளர்ச்சியைக் கொண்டவர்களாய் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், தேவன் உங்களை சுகமாக்க விரும்புகிறீர்களா? அவர் அதை செய்வாரென்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய முழு இரு தயத்தோடும் அதை விசுவாசித்தால், நீங்கள் அதைக் கொண் டிருக்கலாம். அப்படியானால், எழுந்து நின்று அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அது சரி. தாயாரே, அது உம்மை விட்டுப் போய்விட்டது. 78. ஐயா, நீர் உணருகிறீரா? நீர் அங்கே மேலே உம்முடைய முகத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறீர். நீர் லுகேமியா (இரத்தத் தில் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருப்பதால் உண்டாகும் நோய் - மொழிபெயர்ப்பாளர்.) வியாதியினால் மரிப்பதற்காக ஆயத்தமாயிருக்கிறீர், அது சரியில்லையா? ஒரு நிமிடம் உம்மு டைய காலூன்றி நில்லும். தேவன் உம்மேல் இரக்கமாயிருப்பாராக. பிதாவே, இந்த மனிதனின் ஜீவனுக்காக இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன், அவர் மரிக்காமல் ஜீவிப்பாராக. ஆமென். தேவன் அதை அருளுகிறார். சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உம்முடைய நண்பர் அங்கே அழுது கொண்டிருக்கிறார், அவர் சரியாக உமக்கு அடுத்ததாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவருக்கு ஆஸ்துமா வியாதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது, அவரும் கூட சுகமடைய விரும்புகிறார். ஐயா, நீர் எழுந்து நின்று ஆஸ்துமா வியாதியிலிருந்து உம்முடைய சுகத்தை ஏற்றுக் கொள்வீரா? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, நீங்கள் அந்த ஸ்திரீகளுக்கான கோளாறிலிருந்து சுகமடைய விரும்புகிறீர்களா? அப்படியே களிகூர்ந்து கொண்டும், தேவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டும் போங்கள். சுகமாயிரு. 79. வாருங்கள். சீமாட்டியே, தொடர்ந்து நடந்து கொண் டிருக்கிறாய். அந்த ஆஸ்துமா வியாதி மேலேயிருந்த அந்த மனி தனை விட்டு போன போதே உன்னை விட்டும் போய் விட்டது. அப்படியே தொடர்ந்து நடந்து, "தேவனுக்கு நன்றி” என்று கூறுங்கள். எத்தனை பேர் சுகமடைய வரும்புகிறீர்கள்? பரிசுத்த ஆவி யானவர் இங்கே இருக்கிறார். உங்களுக்கு சுகம் அவசியமானால், அதைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவே (இப்பொழுதே) தருணம். நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? தேவனுடைய குமாரன் இங்கே உங்களுடைய மத்தியில் இருக்கிறாரென்று நிரூபிப்பதற்கு இயேசு கிறிஸ்து இன்னும் என்ன செய்ய வேண்டும்? ஐயா, உம்முடைய வீடு சந்தோஷமாய் இருக்கப் போகிறது. 80. நீங்கள் இதை எனக்காக செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசித்தால், ஒருவர் மற்றவர் மேல் உங்களுடைய கரங்களை வையுங்கள், தேவனுடைய இராஜ்ஜியம் உங்களுக்குள் வருவதை நீங்கள் காண்பீர்கள். உங்களுடைய கரங்களை ஒருவர் மற்றவர் மீது வையுங்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இக்கட்டித்திலுள்ள ஒவ்வொரு வியாதியையும் நான் கடிந்து கொள்ளுகிறேன்.